‘பாரத் மாதா கி ஜே’ மற்றும் ‘வந்தே மாதரம்’ கோசம் போட்டு தேசபக்தியில் ஒரு
பிடி ஜாஸ்தி என்று வேடம் போடுவதில் ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பலை யாரும் விஞ்ச
முடியாது. ஆனால் பாரதமாதாவை அமெரிக்காவிற்கு கூட்டிக்கொடுத்தவர்கள் இந்தக்
காவிக் கூட்டம்தான் என்பதை நிரூபிக்கிறது இந்தியாவிற்கு எதிரான
உலகவர்த்தகக் கழகத்தின் தற்போதைய தீர்ப்பு. வினவு.com :உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் சூரியஒளி மின்தகடுகளை
இந்தியா பயன்படுத்துவதை விரும்பாத அமெரிக்கா, காட் (GATT-General Agreement
of Trade and Tariff) ஒப்பந்தத்தைக் காட்டி தடுத்து நிறுத்தியிருக்கிறது.
இது குறித்த உலக வர்த்தக கழகத்தின் (WTO) தீர்ப்பு 25-02-2016 அன்று
வெளிவந்திருக்கிறது.
உள் நாட்டில் தயாராகும் சூரிய ஒளி தகடுகளை பயன்படுத்தும் பொழுது தேசிய சந்தை, வேலைவாய்ப்பிற்கான அபிவிருத்திகள், வெளிநாட்டுக் கடன்களை குறைக்க முயல்வது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என தேசிய பொருளாதாரத்தை கட்டியமைக்கும் இறையாண்மை அம்சம் அடங்கியிருப்பதை பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்தியா இப்படி உள்நாட்டிலேயே தயாரிப்பதால், தனது நாட்டில் 90% சூரிய ஒளி மின்தகடு ஏற்றுமதியாளர்கள் வீழ்ச்சியடைந்திருக்கிறார்கள் என உலகவர்த்தகக் கழக தீர்ப்பாயத்தில் பஞ்சாயத்து நடத்தியிருக்கிறது அமெரிக்கா.
சொந்த உழைப்பில் பொங்கி சாப்பிடுவதற்காக நாம் ஏன் உலகவர்த்தகக் கழகத்தின் முன் ஆஜராகவேண்டும்? இந்தக் கேள்வி எந்த ஒரு தேசபக்தருக்கும் எழவில்லை என்றால் எதுதான் தேசபக்தி?
இந்தியா உலகவர்த்தகக் கழகத்தின் முன் ஆஜராவதற்கு காரணம் 1994-ம் ஆண்டு காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால்தான். இந்த காட் ஒப்பந்தம் தனியார்மயம், தராளமயம், உலகமயம் என்பதன் பெயரில் கொண்டு வந்திருக்கும் அழிவுகள் பிரளயமானவை. நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டும் உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்ட காலம் போய் தற்பொழுது காட் ஒப்பந்ததைக்காட்டி ‘உன் காலில் நிற்க முயன்றால் உன்னை வெட்டுவேன்’ என்று அமெரிக்கா நேரிடையாக மிரட்டுகிறது.
தனியார்மயம் வளர்ச்சி, அந்நிய முதலீடு வளர்ச்சி என்று “காட்” ஒப்பந்தத்திற்கு கொடி பிடித்தவர்கள்தான் அனைத்துக் ஓட்டுக் கட்சிகளும். ஆட்சியில் மாறி மாறி இருந்த காங்கிரசும், பா.ஜ.கவுல் இந்த அடிமைச் சாசனத்தை நிறைவேற்றவதில் போட்டி போட்டன.
அதிலும் ‘பாரத் மாதா கி ஜே’ மற்றும் ‘வந்தே மாதரம்’ கோசம் போட்டு தேசபக்தியில் ஒரு பிடி ஜாஸ்தி என்று வேடம் போடுவதில் ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பலை யாரும் விஞ்ச முடியாது. ஆனால் பாரதமாதாவை அமெரிக்காவிற்கு கூட்டிக்கொடுத்தவர்கள் இந்தக் காவிக் கூட்டம்தான் என்பதை நிரூபிக்கிறது இந்தியாவிற்கு எதிரான உலகவர்த்தகக் கழகத்தின் தற்போதைய தீர்ப்பு.
தீர்ப்பு வெளியானவுடன் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி மைக்கேல் புரோமேன், இந்தியா நாட்டின் இறையாண்மையை மட்டுமல்ல காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எல்லா நாடுகளையும் எப்படி மிரட்டுகிறார் என்று பாருங்கள்.
“உலகவர்த்தக் கழகத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியமான ஒன்று. இது இந்த (இந்தியாவிற்கு எதிரான) வழக்கிற்கு மட்டும் பொருந்தக் கூடிய ஒன்றல்ல. மாறாக எந்தெந்த நாடுகள் எல்லாம் பாகுபாடான உள்நாட்டுக் கொள்கைகளை கடைபிடிக்கிறதோ அவைகளுக்கு மிகத் தெளிவான செய்தியை அனுப்பியிருக்கிறது” என்கிறார் புரோமேன்.
இந்தியாவிற்கு எதிராக பேசினார்கள் என்று மாணவியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பா.ஜ.க-வின் தமிழக ரவுடியான ஹெச்.ராஜா பேட்டி கொடுத்தது; வக்கீல் சவுகானின் ஆர்.எஸ்.எஸ் கூலிப்படை கோர்ட் வளாகத்தில் மாணவர்கள், பத்திரிக்கையாளர்களை தேசபக்தி வேடத்தில் தாக்குதல் நடத்தியது, பி.ஜே.பி எம்.எல்.ஏ ஓபி சர்மா தேசத்தைக் காக்க ரவுடியாக அவதாரம் எடுத்தது என்று தேசபக்தியின் பெயரில் ஆட்டம் போட்ட காவிக் கும்பல், புரோமேன் இந்திய இறையாண்மை மீது உச்சா போகிற பொழுது கள்ள மவுனமாக இருக்கிறதே ஏன்?
ஏன் என்பதை புரோமேனே மேற்கொண்டு சொல்கிறார் இப்படி
“மிகச் சமீபத்திய இந்த கட்டாய வர்த்தக உடன்படிக்கையின் மீதான வெற்றி அதிபர் ஒபாமா வர்த்தக-எளிமையாக்கல் மற்றும் அமலாக்கம் சட்டம் 2015-ல் (Trade Facilation and Trade Enforcement Act TFTEA 2015) கையெழுத்திடும் இதே நாளில் தான் வந்திருக்கிறது. இச்சட்டம் இருதரப்புகளுக்கிடையேயான சட்டப்பூர்வ நடவடிக்கைகள், அரசு நிர்வாகத்தின் அமல்படுத்தும் திறமையை அதிகரிப்பதாக அமைந்துள்ளது. இதன்படி அமெரிக்கா, உலக பொருளாதாரத்தில் தன் நாட்டு வணிகர்கள் விவசாயிகள் தொழிலாளிகளின் வர்த்தக உரிமையை உறுதியாக நிலைநாட்டிக்கொள்ளும் வரலாற்றை கட்டியமைக்க முடியும்” என்கிறார்.
புரோமேன் கூறும் வாக்கியத்தின் பொருள் இந்தியாவில் வியாபாரம் செய்யும் அமெரிக்க முதலாளியின் இலாபத்திற்கு இடையூறாக தேசிய பொருளாதாரக் கொள்கை இருந்தால் அமெரிக்கா இந்தியா மீது நடவடிக்கை எடுக்கும் என்பதாகும்.
இப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாகத்தான் கடந்த டிசம்பர் மாதம் தோகாவில் நடைபெற்ற உலகவர்த்தக கழக மாநாட்டில் மோடி கும்பல் கையெழுத்திட்டது. Level Playing Field என்ற காட்ஸ் ஒப்பந்தத்தின் விதி இந்தியா தேசிய பொருளாதாரத்தை கட்டியமைக்கும் திட்டங்களுக்கு நிகராக அமெரிக்க முதலாளிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், உயர்கல்வித் துறையில் இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இணையாக வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கும் அனுமதி அளித்து நாட்டுக்குள் விட வேண்டும் என்று சொல்கிறது. இதன்படி நீங்கள் சோறு சாப்பிட்டால் அமெரிக்கா காரனுக்கும் சேர்த்து ஊட்ட வேண்டும். அவன் வயிறு நிறையாவிட்டால் காட்ஸ் ஒப்பந்தத்தின் படி குற்றமாகும். இந்தவிதியில் கடந்த டிசம்பரில் கையெழுத்திட்டது மோடி கும்பல் தான்.
இதை எதிர்த்து கடந்த டிசம்பரில் நாடெங்கிலும் மாணவர்கள் இந்தியாவின் கல்வித்துறை சூறையாடப்படும் என்றும் விவசாயிகள் விவசாயம் அழியுமென்றும் தொழிலாளர்கள் தாங்கள் வாழ்வாதாரத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவோம் என்று “மோடியே காட்ஸிலிருந்து வெளியேறு” “ஏகாதிபத்தியத்தின் காலை நக்காதே” என்று போராடினர். உண்மையான தேசத் துரோகிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினர். ஆனால் அப்பொழுது அர்னாப் கோஸ்வாமி போன்ற ஊடக விபச்சாரிகளால் நாட்டு மக்களின் தேசபக்தி கண்டு கொள்ளப்படவில்லை.
தேசத்தைக் காக்கும் உழைக்கும் மக்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத இந்தக் கூட்டம் தான் ஜே.என்.யு மாணவர்கள் தேசவிரோதிகள் என்று திட்டமிட்டு பாசிசத்தைக் கட்டவிழ்த்தனர். மாணவர் உமர் காலித், “மோடி அரசின் கார்ப்பரேட் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்ளைக்கு இந்தியாவை அடகு வைக்கும் சதித்தனத்தை அம்பலப்படுத்திய காரணத்திற்காகத்தான் நாங்கள் வெறிகொண்டு தாக்கப்படுகிறோமேயன்றி இந்தியாவிற்கு எதிரான கோசம் என்பதெல்லாம் வெறும் நாடகம்” என்று காவிக்கும்பலின் களவாணித்தனத்தை நயமாக தோலுரித்தார்.
“ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல் கட்டமைக்க விரும்புகிற தேசியம் இந்துதேசியமன்றி காலனிகளை எதிர்க்கும் நாட்டு விடுதலை தேசியம் அல்ல” என்று வரலாற்றாசிரியர் ரொமீலா தாப்பர் காவிகும்பலின் அரசியலை பிளந்துகாட்டினார்.
இதற்கு ஆதாரமாக ‘உன் நாடு என் காலனி’ என்று அமெரிக்கா இப்பொழுது நேரிடையாக மிரட்ட ஆரம்பித்திருக்கிறது. இனி நாம் செய்ய வேண்டியது நாட்டைக்காக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியமைப்பதுதான். அதற்கான முதற்படியே அமெரிக்காவிற்கு கால் கழுவும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.யின் இந்து தேசிய பாசிசத்தை முறியடிப்பதில் இருந்தே தொடங்க இயலும் என்பதை உலக வர்த்தகக் கழகத்தின் தீர்ப்பு நிரூபிக்கிறது அல்லவா?
– இளங்கோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக