வியாழன், 3 மார்ச், 2016

மும்பை மதுபான அழகிகளின் நடனத்துக்கு அனுமதி...உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது


மராட்டியத்தில் மதுபான விடுதிகளில் அழகிகளின் நடனத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அழகிகள் நடனம் மராட்டியத்தில் விடிய– விடிய மதுபான விடுதிகளில் நடைபெறும் அழகிகளின் நடனத்தை கலாசார சீரழிவாக அரசு கருதியது. மேலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து, மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு மராட்டிய அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மதுபான விடுதி உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, சில நிபந்தனைகளுடன் மதுபான விடுதியில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்தது.
அழகிகளின் நடனம் இடம்பெறும் இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் சமர்ப்பித்தல் உள்ளிட்ட நிபந்தனைகள் இதில் அடங்கும்.


சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு இந்திய ஓட்டல் மற்றும் உணவக சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஷ்ரா மற்றும் சிவ கீர்த்தி சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மராட்டிய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், ‘‘நடனமாடும் அழகிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் நடனம் ஆடும் பகுதிகளிலும், உணவகங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இதன் மூலம் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கலாம்’’ என்று வாதிட்டார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மதுபான விடுதிகளில் அழகிகளின் நடனத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நீக்கம் செய்தனர். 

மேலும், மதுபான விடுதிகளின் வாசலில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று கூறிய அவர்கள், அழகிகளின் நடனம் இடம்பெறும் பகுதியில் அதனை பொருத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டனர். தவிர, இன்னும் 10 நாட்களில் மதுபான விடுதி உரிமையாளர்களுக்கு லைசென்சு வழங்குமாறு மராட்டிய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மராட்டிய அரசுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

10 நாட்களில் லைசென்சு வழங்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இந்திய ஓட்டல் மற்றும் உணவக சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.தினமணி.com

கருத்துகள் இல்லை: