காங்கிரஸ் சார்பில் விருப்பமனு
அளித்தவர்கள் தவிர வேறு யாருக்கும் சீட் தர முடியாது என்று தமிழக காங்கிரஸ்
தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்து, காங்கிரஸ் கட்சியில்
சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.>வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட
காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு வாங்கப்பட்டு வருகிறது. அந்த நேர்காணலில்
சிதம்பரம் மற்றும் தங்கபாலு ஆகியோரின் ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை.ஆனால் தங்களுக்கு சீட் கண்டிப்பாக உண்டு
என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் விருப்பமனு கொடுத்தவர்கள்
தவிர, வேறு யாருக்கும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, அவருக்கு
சீட் தர முடியாது என்று என்று இளங்கோவன் கூறிவிட்டார்.
இந்த அறிவிப்பு ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலு ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிதம்பரம் ஆதரவாளர்கள் நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கூடினார்கள். அந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி.அழகிரி, கராத்தே தியாகராஜன் உட்பட 8 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்
அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது. முடிவில் மார்ச் மாதம் 4ஆம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக