சுவிஸ் அகதிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட வாக்கெடுப்பை படுதோல்வி
அடையச்செய்த குடிமக்களுக்கு அந்நாட்டு பத்திரிகைகள் ஒன்றாக இணைந்து
பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன
குற்றம் புரிந்த அகதிகளை நாடுகடத்த
நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அகதிகளுக்கு ஆதரவாக 58.9 (19,66,976) சதவிகித
குடிமக்களும், அகதிகளுக்கு எதிராக 41.1 (13,75,058) சதவிகித மக்களும்
வாக்களித்தனர்.
இதன் மூலம் சுவிஸ் மக்கள் கட்சி கொண்டு
வந்த வாக்கெடுப்பு படுதோல்வியை சந்தித்துள்ளது. அதாவது, நடந்து முடிந்த
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு சுவிஸ் மக்கள் கட்சிக்கு கிடைத்த மிக மோசமான
முதல் தோல்வியாகும்.
வாக்கெடுப்பின் முடிவுகள்
அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில், புதிய மசோதாவிற்கு எதிராக வாக்களித்த
குடிமக்களுக்கு அந்நாட்டு பத்திரிகைகள் பாராட்டுக்களை தெரிவித்து
வருகின்றன.
சுவிஸின் Blick என்ற பத்திரிகை தனது முதல் பக்கத்தில் ”Thank you Switzerland!”
என்ற தலைப்புச் செய்தியில், ‘புதிய மசோதாவிற்கு எதிராக குடிமக்கள்
வாக்களித்திருப்பதன் மூலம் அகதிகளுக்கு சுவிட்சர்லாந்து ஒரு மிகச் சிறந்த
நட்பு நாடு என்பதை நிரூபித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாடு என்பது ஒட்டுமொத்த
மக்களுக்காக மட்டுமே செயல்பட வேண்டுமே தவிர, குடிமக்களுக்காகவும், சுவிஸ்
கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களுக்காவும் தனித்தனியாக செயல்படக்கூடாது என்பதை
சுவிஸ் மக்கள் கட்சிக்கு குடிமக்கள் உணர்த்திவிட்டனர்.
மனிதத்தை போற்றும் குடிமக்களை உடைய சுவிட்சர்லாந்து நாட்டிற்காக நாம் அனைவரும் பெருமை பட வேண்டும்’ என பாராட்டியுள்ளது.
சூரிச் நகரில் வெளியாகும் Tages-Anzeiger என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்த வாக்கெடுப்பின் முடிவு சுவிஸ் மக்கள் கட்சிக்கு கிடைத்த மிகப் பெரிய அவமானம்.
இந்த படுதோல்வியை ஏற்றுக்கொண்டு அகதிகளுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட வேண்டும்’ என அறிவுறித்தியுள்ளது.
சுவிஸின் Neue Zürcher Zeitung என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘சுவிஸில் உள்ள வெளிநாட்டினர்கள் இனிமேல் நன்கு மூச்சு விடலாம்.
வெளிநாட்டினர்களை சுவிஸ் குடிமக்கள் கைவிட
மாட்டார்கள் என்பதை தான் இந்த வாக்கெடுப்பு முடிவுகள் நிரூபிக்கின்றன’ என
கருத்து தெரிவித்துள்ளது.
பேர்ன் மாகாணத்தில் வெளியாகும் Der Bund
என்ற பத்திரிகையில் ‘வெளிநாட்டினர்களின் உரிமையை காப்பாற்ற குடிமக்கள்
ஒன்றாக திரண்டு வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பில் 63 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இந்தளவிற்கு மக்கள் திரண்டு வந்து வாக்களிக்கவில்லை.
வெளிநாட்டினர்கள் மீது திணிக்கப்படும்
’இரட்டை முகம் கொண்ட சட்டத்தை’ தடுப்பதே குடிமக்களின் ஒரே நோக்கமாக
இருந்துள்ளது என்பது இந்த வாக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது’ என
பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. மாலைமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக