ஜெ.வோட பிறந்தநாளை வழக்கம்போல அ.தி.மு.கவினர் அமர்க்களப்படுத்தியதைக் கவனிச்சீங்களா?'"பச்சைக்
குத்துவது, மண்சோறு சாப்பிடுவது, நீச்சல்குளத்துல மிதப்பது,
பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டுட்டு அங்கே விழா கொண்டாடுவது, பாலத்துலே
பேனர் வச்சி போக்குவரத்தை முடக்கியதுன்னு ஏராளமான கூத்துகளை மாநிலமே
பார்த்ததே! ஜெ.கிட்டே பேரு வாங்கணும்னு மந்திரிகளிலிருந்து அடிமட்ட
நிர்வாகிகள் வரை இப்படித்தானே செயல்படுறாங்க!''
""அப்படியெல்லாம்
செயல்பட்டும்கூட பவர்ஃபுல்லான ஐவரணி அமைச்சர்களே ஆடிப்போயிருக்காங்க.
விவரமா சொல்றேங்க தலைவரே.. அ.தி.மு.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்
ரெடியானதையும், அதை மதுரை மீனாட்சியம்மன், பழனி முருகன் கோயில்ன்னு சசிகலா,
தன் அண்ணன் மகள் பிரபாவதி சகிதம் எடுத்துக்கிட்டுப் போய், சிறப்பு பூஜை
பண்ணியதையும் ஏற்கனவே நாம பேசியிருக்கோம். அந்தப் பட்டியலில் அப்பப்ப சில
திருத்தங்களை செய்றாங்களாம். பிப்ரவரி 26-ந் தேதியன்னைக்கு பட்டியலோடு
ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலுக்கும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கும் சசி,
பிரபாவதி போய் மீண்டும் சிறப்பு பூஜை பண்ணியிருக்காங்க."ஏற்கனவே பழனி கோயிலில் பூஜை செய்தப்பவே, மந்திரிகளெல்லாம் தங்களோட பெயர் அந்தப் பட்டியலில் இருக்குமோ இருக்காதோன்னு ஆடிப் போயிருந்தாங்களே?.''"இப்பவும் அதே நிலைமைதாங்க தலை வரே.. இத்தனை நாளா ஐவரணி மந்திரிகளான ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் இவங்கதான் பவர்ஃபுல்லா இருந் தாங்க.
இவங்களோட தொடர்பில் உள்ள அ.தி.மு.க மா.செ.க்களும் அவங்க மூலமா நியமிக்கப்பட்ட மற்ற நிர்வாகிகளும் சிண்டிகேட்டா செயல்பட்டு, சீட்டுக்கு கலெக்ஷன் பண்ணினாங்க.
"கலெக்ஷனா?''"அதாவது ஒவ்வொரு மா.செ. வும் அவங்க மாவட்டங்களுக்குட் பட்ட தொகுதிகளிலிருந்து தலா 5 பேரை வேட்பாளருக்குப் பரிந் துரை பண்ணி பட்டியல் அனுப்பி யிருந்தாங்க. இது ஐவரணி மூலமாத்தான் தலைமைகிட்ட போகும். பட்டியலில் இருந்த 5 பேரில் 3 பேரை மா.செ.க்களே செலக்ட் பண்ணி, ஒருத்தருக்குத் தெரியாம ஒருத்தர்க்கிட்டன்னு தலா 25 ’எல்’ வாங்கிட்டாங்க. இதில் ஒருத்தருக்குதான் சீட் கிடைக்கும். அந்த ஒருத்தருக்கு சீட் கன்ஃபார்ம் ஆனதும் அடிஷனலா 50 "எல்'’லா வாங்கி, சீட் கிடைக் காத மத்த ரெண்டுபேர்க் கிட்ட யும், பிரிச்சிக் கொடுத்துடுவதுன்னு ப்ளான்.
சீட் கிடைக்காதவங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்ல முக்கியத்துவம் கிடைக்கும்ன்னு சொல்லி, சரிக்கட்டுவாங்களாம். இப்படி தொகுதிதோறும் 75 "எல்' வீதம் கல்லா கட்டப்படுது. ஐவரணி சப்போர்ட் டில் இந்த கலெக்ஷன் மேளா நடந்துக் கிட்டிருந்த நிலையிலேதான் திடீர் திருப்பம். ஐவரணியில் சீனியரான ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை கார்டன் கட்டம் கட்டியிருக்குது. முக்கியமா, வேளச்சேரி அசோக் எம்.எல்.ஏ.க்கிட்ட இருந்த பகுதிச் செயலாளர் பதவியை கார்டன் பறிச்சிடுச்சி.
''"வேளச்சேரி அசோக்குன்னா நக்கீரன் அலுவலகம் மேலே போலீஸ் சப்போர்ட்டோடு அ.தி.மு.க.காரங்க தாக்குதல் நடத்துனப்ப, அலுவலக கேட்டை வெளிப்பக்கமா பூட்டுப் போட்டு, பெட்ரோல் குண்டு வீசி ரவுடித்தனம் செய்த அந்த எம்.எல்.ஏ.வா?
''"அதே ஆளுதான்...; ஓ.பி.எஸ். பேரைச் சொல்லி, சிட்டிகுள்ள பெரிய, அட்ராசிட்டி பண்ணிக்கிட்டி ருந்தாரு. தொகுதியைத் தாண்டியும் வசூலில் இறங்கி யிருக்காரு. குறிப்பா, நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில், 5 லட்ச ரூபாய்க்கும் அதிக மதிப் பிலான சொத்துக்களை வாங்கி, யாராவது பதிவு செஞ்சா, தனக்குத் தகவல் தரச்சொல்லி அதிகாரி களை மிரட்டுறது அசோக்கோட வழக்கம். தகவல் கிடைச்சதும், சம்மந்தப்பட்ட ஆட்களை மிரட்டி பர்சண்டேஜும் வாங்கியிருக்காரு. போதாக் குறைக்கு வேளச்சேரி தொகுதிக்குள் இருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை எல்லாம், அதிகாரிகளை பலவந்தப்படுத்திப் பட்டா போடு றதும் அசோக்கோட அக்மார்க் அடாவடியாம். இப்படி ஓ.பி.எஸ் சப்போர்ட்டில் ஏகப்பட்ட விவகாரங்கள் உளவுத்துறை மூலம் கார்டன் கவனத்துக்கு போனதாலதான், அசோக் மீது அதிரடி நடவடிக்கை பாய்ஞ்சிருக்கு.
இன்னும் சில பேர் மீதும் கட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குது போலிருக்கே?''<""ஆமாங்க தலைவரே.. ஓ.பி.எஸ் ஆட்களான மீனவரணி துணைச் செயலாளர் ரமேஷ், எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் வரகூர் அருணாசலம், ஓ.பி.எஸ்.ஸுக்கு வேண்டியவரும் நத்தம் விசுவநாத னின் மாவட்டத்துக்காரருமான பழனி நகரச் செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோரையும் கட்சியில் இருந்து கார்டன் கட்டம் கட்டியிருக்கு. இவங்கள்ல அருணாசலம் சீட்டுக்காக எம்.நட ராஜனைப் பார்த்தாராம். பழனி மாரிமுத்தோ, பாதயாத்திரை போகும் வழியில், சசிகலாவைப் புகழ்ந்து பேனர் வச்சாராம்.
"அப்படின்னா சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைன்னு இதைச் சொல்லலாமா?""நடவடிக்கைக்கு சொல்லப்படுற காரணங் களில் இது ஒண்ணு அவ்வளவுதான். உள்ளே இருக் கிற நிலைமையே வேற. தலைமைக் கழகத்துக்கு கட்சிக்காரங்க அனுப்புற புகார்களெல்லாம் ஐவரணி மூலமாத்தான் கார்டனுக்குப் போகும். இதைத் தெரிஞ்சிக்கிட்ட மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஐவரணி மந்திரிகளில் தங்களுக்குத் தோதானவங் களைப் பிடிச்சி, புகாரை அமுக்கிடுறது வழக்கம். இது ஜெ.’ கவனத்துக்கும் போயிருக்கு. இந்த நிலை யில், யார் யாருக்கு சீட் கிடைக்கக் கூடாதுன்னு உள்ளூர் கட்சிப்புள்ளிகள் நினைக்கிறாங்களோ, அவங்களைப் பத்தின புகார்களை ஆதாரங்களோடு நேரா சி.எம்.செல்லுக்கே அனுப்பிடறாங்க.
மக்கள் பிரச்சினைகளை கவனிக்க வேண்டிய சி.எம். செல், இந்தப் புகார்களை முதல்வர் அலுவலகம் மூலமா கார்டனுக்கு அனுப்பிடுது. சி.எம். செல்லில் கட்சி நிர்வாகிகளின் புகார்கள் குவிய, டென்ஷனான கார்டன், ஐவரணிக்கு ஆப்பு ரெடி பண்ணிடிச்சாம். இனி ஓ.பி.எஸ் உள்ளிட்ட 5 மந்திரிகளுக்கும் பழைய பவர் கிடையாதுன்னும், தேர்தல் அறிக்கை தயாரிக் கிறதுக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு கூடுதல் பொறுப்புகளைக் கொடுத்து, அதையெல்லாம் நிர்வகிக்கிற பொறுப்பை சசிகலா டீம்கிட்டே தர்ற துன்னு தேர்தல் வியூகம் வகுத்திருக்காராம் ஜெ.
""கோயில் கோயிலா சசிகலா உற்சாகத்தோடு யாத்திரை போறதன் பின்னணி இதுதானா?''""எந்தத் தரப்புகிட்டேயும் முழு அதிகாரமும் போகாமல் லகானை தன் கையில் வச்சிக்கணும்னு ஜெ. நினைக்கிறாரு. அவரோட கவனம் இப்ப சொத்துக் குவிப்பு அப்பீல் வழக்கில் இருக்குது. அதில் மத்திய அரசு தரக்கூடிய சட்ட உதவிக்கான உத்தரவாதங்களைப் பொறுத்துதான் இங்கே பா.ஜ.க.வுடனான கூட்டணி பற்றி இறுதி முடி வெடுப்பாராம். எப்படியாவது கூட்டணி அமைக்கணும்னு பிரகாஷ் ஜவடேகர், வெங்கையா நாயுடு, அமித்ஷான்னு பா.ஜ.க தலைவர்கள் பலரும் முயற்சி செய்றாங்க.'' nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக