Oscars: The best five jokes from Chris Rock’s monologue
உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து
வழங்கும் பணியை இரண்டாவது முறையாகப் பெற்ற ஹாலிவுட்டின் பிரபல காமெடி
நடிகர் க்றிஸ் ஹாரிஸ், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல, ஹாலிவுட்டில்
நிலவும் நிற வெறியை தோலுரித்துக் காட்டிவிட்டார்.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுப் பட்டியலில் கருப்பினத்தைச் சேர்ந்த எந்தக்
கலைஞருக்கும் விருதளிக்கப்படவில்லை. விருதுக்கான பரிந்துரைப் பட்டியல்
வெளியானதிலிருந்தே பலரும் முணுமுணுத்த இந்த விஷயம், விழா நெருங்க நெருங்க
பெரும் விவாதமாகவே மாறிவிட்டது.
வெள்ளைக் கோட், கறுப்பு பேண்ட் அணிந்து நிறவேற்றுமையை
குறிப்பாலுணர்த்தியபடி மேடையில் தோன்றிய ஹாரிஸ், 'நல்ல வேளை, நிகழ்ச்சியைத்
தொகுத்து வழங்குபவர்களை வெள்ளையர்கள் யாரும் தேர்வு செய்யவில்லை. அப்படிச்
செய்திருந்தால் எனக்கு இந்த வாய்ப்புக் கூடக் கிடைத்திருக்காது!' என
அதிரடியாய்ச் சொல்ல, அரங்கம் அதிர்ந்தது.
இந்த ஆஸ்கர் விழாவை பல பிரபலங்கள் புறக்கணித்துவிட்டனர். குறிப்பாக வில்
ஸ்மித், ஜாடா பிங்கெட் ஸ்மித் போன்றோர். காரணம் இந்த நிறவெறிதான். க்றிஸ்
ஹாரிஸ் மட்டும் ஏன் புறக்கணிக்காமல் நிகழ்ச்சி நடந்தது வந்தது ஏன்?
அதற்கு அவர் அடித்த கமெண்ட்: "எப்படியும் ஆஸ்கர் விருது விழா நடக்கத்தான்
போகிறது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியும் இருக்காது. கிடைத்த இந்த
வேலையையும் ஒரு வெள்ளைக்காரனுக்கு விட்டுவிட வேண்டாமே என்றுதான் வந்தேன்"
என்றார். Read more /tamil.filmibeat.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக