வியாழன், 3 மார்ச், 2016

JNU மாணவர் கண்ணையா குமாருக்கு ஜாமீன்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கண்ணையாவை ஜாமினில் விடுவித்தது டெல்லி உயர்நீதிமன்றம். 22 நாள் சிறைவாசத்துக்கு பிறகு இன்று வெளியே வருகிறார் மாணவர் கண்ணையா குமார். ரூ.10,000 ரொக்க ஜாமினில் கண்ணையா குமார் விடுவிக்கப்பட்டுள்ளார். தேசத்துரோக குற்றச்சாட்டில் 22 நாளுக்கு முன் கண்ணையா குமார் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக நிகழ்ச்சியில் தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக புகார் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட கண்ணையா குமார் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் ஆவார். 6 மாத காலத்துக்கு இடைக்கால ஜாமினில் கண்ணையா விடுவிக்கப்பட்டு உள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கண்ணையா குமாருக்கு பேராசிரியர் உத்தரவாதம் தர நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஜாமினில் விடுவிக்கக்கூடாது என்ற போலீஸ் தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. dinakaran.com

கருத்துகள் இல்லை: