ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

காஞ்சி சங்கராச்சாரிகள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தறுப்பு யுத்தம்...ஆயிரக்கணக்கான சொத்துக்கள்...காவிகளுக்கு ஏன் சொத்துக்கள்?

ஆ று மாதங்களாக அமுங்கிக்கிடந்த காஞ்சி சங்கர மட அதிகாரப் போட்டி மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இந்த சங்கரமடத்துக்குச் சொந்தமாக இந்தியா முழுவதும் பல்லாயிரம் கோடி சொத்துகள் இருக்கின்றன. அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் ஜெயேந்திரருக்கு மட்டுமே உண்டு. இளையவரான விஜயேந்திரருக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுக்க ஜெயேந்திரர் விரும்பவில்லை. மடத்தின் அதிகாரத்தை ஜெயேந்திரரிடமிருந்து கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் விஜயேந்திரர்.ஆறு மாதங்களுக்கு முன்பு கடுமையான உடல் நல பாதிப்புகளாலும் மன உளைச்சல்களாலும் மும்பை மருத்துவமனை ஒன்றில் அட்மிட் ஆனார் ஜெயேந்திரர். அப்போது,  ஜெயேந்திரருக்கு மனநிலை சரியில்லை என்பதாக சான்றிதழ் கொடுக்க வலியுறுத்தி மருத்துவமனை நிர்வாகத்துக்கு விஜயேந்திரர் தரப்பு நெருக்கடி தந்தது.  அப்படி சான்றிதழ் பெறுவதன் மூலம், ஜெயேந்திரரிடமிருந்து அதிகாரத்தை முறைப்படி மாற்றியமைக்க முடியும் என்கிற திட்டத்தில் காய்களை நகர்த்தினர்.


இதனையறிந்த ஜெயேந்திரர், மோடி வரை விவகாரத்தைக் கொண்டுப்போனார். மோடியின் தலையீட்டில் இளையவருக்கு எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரங்களையும் இதன் பின்னணியில் நடந்த வில்லங்கங்களையும் அப்போதே நக்கீரனில் எழுதியிருக்கிறோம். மடத்தில் மறுபடியும் அதிகாரப் போட்டி தலையெடுத்துள்ளது என்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

 இதுகுறித்து நாம் விசாரித்த போது, நம்மிடம் பேசிய சங்கரமடத்துக்கு நெருக்க மானவர்கள்,

 நாம் விசாரித்த போது, நம்மிடம் பேசிய சங்கரமடத்துக்கு நெருக்க மானவர்கள், ""ஜெயேந்திரருக்கு ராமகிருஷ்ணன் என்கிற ஒரு சகோதரர் இருக்கிறார். இவர் சென்னை ஜனக்புரி அறக்கட்டளை என்கிற பேரில் ஒரு ட்ரஸ்ட் நடத்தி வருகிறார்.

சென்னையிலுள்ள சங்கர நேத்ராலயம், திருப்பதி திருமலையிலுள்ள 300 அறைகள் கொண்ட சங்கரமடம், காஞ்சியிலுள்ள கல்யாண மண்ட பம் உள்பட சுமார் 1000 கோடி மதிப்பிலான சங்கர மடத்தின் சொத்துகள் இந்த அறக் கட்டளையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருந்தாலும் இவை சங்கர மடத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ராமகிருஷ்ணனை அழைத்து நீண்ட நேரம் பேசினார் விஜயேந்திரர். "பெரியவாளுக்கு (ஜெயேந்திரர்) வயசாகுது. உடல்நலமும் மோசமா இருக்குங்கிறது உங்களுக்கே தெரியும். பெண்களுக்கு பணத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார். இப்படியிருந்தா மடம் என்னாவது? அதனால, மடத்தின் அதிகாரத்தை எனக்கு மாத்தியமைக்க பெரியவாளிடம் நீங்கதான் வலியுறுத்தணும். எனக்கு உதவி செஞ்சா, நீங்க நிர்வகிக்கும் அறக்கட்டளையை மடத்திலிருந்து ரிலீஸ் செய்து தருகிறேன்' என அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

அதற்கு, "நான் சொன்னா அண்ணன் கேட்பாரான்னு தெரியலை. இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கிறேன்'னு சொல்லியிருக்கிறார் ராமகிருஷ்ணன். அவர் முயற்சித்தும் பார்த்திருக்கிறார். ஆனா, அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை ஜெயேந்திரர். இதனையறிந்த விஜயேந்திரர் கோபமடைந் தார்'' என்று ரகசியமாக நடந்ததை சுட்டிக்காட்டினார்கள்.

இருப்பினும் விஜயேந்திரர் தரப்பு தனது முயற்சியை கைவிடவில்லை. அவருக்கு நெருக்கமாக இருக்கும் ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி. மாதவன் என்பவர் ஜெயேந்திரரிடம், "இளையவருக்கு கார்டனோடு நிறைய தொடர்பு இருக்குங்கிறது உங்களுக்குத் தெரியும். அதிகாரத்தை அவருக்கு மாத்திக் கொடுத்திடுங்க. எப்போதும் போல நீங்க இருக்கலாம். நீங்க அனுபவிக்கிற வசதிகளுக்கும் விசயங்களுக்கும் எந்த பாதிப்பும் வராது. நீங்க மறுத்தா, உங்க மீது புதுசா வழக்கு போட்டு தொந்தரவு தரமுடியும். யோசிச்சிப் பாருங்க' என்று ஒருவித தொனியில் மிரட்டியிருக்கார்.

இதனால் மிரண்ட ஜெயேந்திரர், தனக்கு வேண்டியவர்களிடம் நிலைமையைச் சொல்லி கலங்கியதுடன், பயத்தில் திருப்பதிக்கு சென்றுவிட்டார்'' என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். இதுகுறித்து மாதவனை தொடர்புகொண்டு கேட்டபோது, ""அவாள் எவ்வளவு பெரிய மடாதிபதி. அவரைப் போய் நான் மிரட்ட முடியுமா? நான் எந்த மிரட்டலையும் செய்யவில்லை. அவர் மீது ரொம்ப மரியாதை வைத்திருப்பவன் நான்'' என்று மறுத்தார் மாதவன்.

மீண்டும் தனக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் மிரட்டல்களையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்கள் மூலமாக பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறார் ஜெயேந்திரர். ஆறுதலும் தைரியமும் அளிக்கப்பட்டதுடன், மடம் பற்றி ரிப்போர்ட் கொடுக்கும்படி மத்திய உளவுத்துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாம். காஞ்சி பெரியசாமி, சின்னசாமி அதிகாரப் போட்டி மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. -இரா.இளையசெல்வன் nakkheeran,in

கருத்துகள் இல்லை: