இந்தியாவிலிருந்து விடுதலை கேட்கவில்லை; இந்தியாவுக்குள் விடுதலை கேட்கிறோம் என விடுவிக்கப்பட்ட மாணவர் தலைவர் கண்ணைய்யா குமார் கூறியிருக்கிறார். கண்ணைய்யா குமாரின் பேச்சைக் கேட்க 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டிருந்தனர்.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து கூட்டம் நடத்தியபோது இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாகக் கூறப்பட்டு, தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணைய்யா குமார் வியாழக்கிழமையன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட கண்ணைய்யா குமார், கைதுசெய்யப்படுவதற்கு முன்பாக எங்கு பேசினாரோ அதே இடத்தில் மீண்டும் உரை ஒன்றை நிகழ்த்தினார். இதனைக் கேட்க 3000க்கும் மேற்பட்டவர்கள் அங்கே திரண்டிருந்தனர்.
இந்தியாவில் இருந்து அல்ல, இந்தியாவுக்குள் சுதந்திரம் கேட்கிறோம் என கண்ணைய்யா குமார் கூறினார். இந்தியாவின் ஊழல் நடைமுறைகளிலிருந்து சுதந்திரம் கேட்கிறோமே தவிர, இந்தியாவிலிருந்தே விடுதலை கேட்கவில்லை என அந்தப் பேச்சில் கண்ணைய்யா குமார் கூறினார். தனது செயல்பாடுகளில் தோல்வியடைந்துவிட்ட மத்திய அரசு, அதிலிருந்து கவனத்தைத் திருப்பவே தன்னைக் குறிவைத்ததாக கண்ணைய்யா குமார் கூறினார். அரசின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்ணைய்யா குமாரின் பேச்சு சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது. கண்ணைய்யா குமாரின் இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருகிறது. கண்ணைய்யா குமாரின் பேச்சு இந்தியாவில் பல தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிலையில், இந்தியாவிலும் உலக அளவிலும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. கண்ணைய்யா குமாரின் பேச்சு யூ ட்யூப் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மிக வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. 2001ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட முகமது அப்சல் குரு 2013ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டார்.
கண்ணைய்யா குமாரின் பேச்சைக் கேட்க திரண்டிருந்த மாணவர்களின் ஒரு பகுதி. அதனை நினைவுகூறும்விதமாக பிப்ரவரி 9ஆம் தேதியன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய கண்ணைய்யா குமார் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார் எனக் குற்றம்சாட்டப்பட்டது. பிப்ரவரி 13ஆம் தேதி கண்ணைய்யா குமார் கைதுசெய்யப்பட்டார். அதற்குப் பிறகு மேலும் இரண்டு மாணவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டனர். தில்லி உயர் நீதிமன்றம் கண்ணைய்யா குமாருக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து, கடந்த வியாழக்கிழமையன்று கண்ணைய்யா குமார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். tamil.bbc.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக