கட்டுமான துறையில் அத்தியாவசிய பொருளாக கருதப்படும் மணலை அரசு குவாரிகள்
மூலம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விற்பனை செய்து வருகின்றன.
ஆனால் நாட்டிலேயே முதல் முறையாக ஆந்திர அரசு, இலவசமாக மணல் வினியோகம் செய்ய
முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த மந்திரிசபை
கூட்டத்தில், மணலை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்த்து தேவையான
மக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதில் புதிய மணல் கொள்கை
வகுக்கப்பட்டதுடன், இதை தவறாக பயன்படுத்தாமல் தடுக்கவும், வெளி
மாநிலங்களுக்கு மணல் கடத்தலை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள்
எடுக்க முடிவு செய்யப்பட்டது.
புதிய மணல் கொள்கை மூலம், குறிப்பிட்ட தேவைகளுக்காக மட்டுமே குவாரிகளில் இருந்து மணல் எடுக்க வேண்டும். மணலை ஓரிடத்தில் சேகரித்து வைக்கவோ, நிலத்தை நிரப்பவோ கூடாது. குவாரிகளில் இருந்து மணல் வாங்கும் கட்டுமான பொறியாளர்கள், மணலுக்கு விலை கொடுக்காமல், அதை கொண்டு செல்லும் வாகன செலவை மட்டும் கொடுத்தால் போதும் என அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக விரிவான வழிகாட்டும் நெறிமுறைகள் அடுத்த ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தெரிகிறது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக