ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

கனிமொழியை கண்காணிக்க தமிழக உளவுத்துறைக்கு உத்தரவு

தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க, கட்சினருக்கும்; உளவுத் துறையினருக்கும் ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சி காலத் தில், 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி மூலம், தமிழகம் முழுவதும், பரபரப்பாக பேசப்பட்ட கனிமொழி, தன் மீதான வழக்கு பிரச்னைகளுக்குப் பின், அமைதியானார். வழக்கில் இருந்து ஜாமினில் வெளி வந்ததும், கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தவர், மீண்டும் தீவிர அரசியலில் இறங்கினார். மீண்டும், ராஜ்ய சபா எம்.பி., யானார். தொடர்ச்சியாக, கட்சியின் மகளிர் அணி செயலராக நியமிக்கப்பட்டதோடு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். : ராஜ்ய சபாவில் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கிற அவர்களின் நன்மைகளுக்காகப் பேசுகிற  எம் பி கனிமொழி என்பது தெரியாதா? அங்கிருக்கிற பிற தமிழக அதிமுக எம்பிக்கள் அங்கும் அம்மா புகழ் பாடுவதை தவிர வேறு என்ன செய்திருக்கிறார்கள்?  எத்தனை பொய்குற்றச்சாட்டு  சுமத்தினாலும் அத்தனையையம் உடைத்து எறிந்து கொண்டு வருகிறார் கனிமொழி என்பது பலருக்கும் வருத்தம் என்பது புரியாதா? 
இதனால், கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில், வேகமாக வளர, அவருக்கென ஆதரவாளர்கள் வட்டம் உருவாகியது. இதைத் தொடர்ந்து, கட்சியின் அனைத்து செயல்பாடுகளிலும் கனிமொழியின் ஆதிக்கத்தையும்; செயல்பாட்டையும் தவிர்க்க முடிய வில்லை. வரும் சட்டசபை தேர்தலுக்கான கட்சியின் பிரசார யுக்திகளையும்; கூட்டணி வியூகங்களையும் வகுப்பது முதற்கொண்டு, நிறைய பணிகளை கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்குஇணையாக அவர் செய்து வருகிறார்.

டில்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், துணைத் தலைவர் ராகுலையும் சந்தித்து, தி.மு.க., கூட்டணியில், காங்கிரசை இணைய வைத்தவர் கனிமொழி தான். அதோடு, சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார், புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களுடன் பேசி, கூட்டணியை பலமுள்ளதாக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், அ.தி.மு.க., மீது பல்வேறுவிதமான அதிருப்தியில் இருக்கும் பல ஜாதி அமைப்புகளையும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வரும் அவர், ஜாதிய பின்னணியில் நடக்கும் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு, தி.மு.க.,வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இதனால்,ஆளுங்கட்சிக்கு இவரது நடவடிக்கைகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவரை கண்காணிக்கவும்; அவரது நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கவும் ஆளுங்கட்சி தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

பதிலடிஅதன் துவக்கம்தான், பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்ட முன்வடிவை விமர்சித்து கனிமொழி கூற, அதை கடுமையாக கண்டித்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அறிக்கை வெளியிட்டார். அடுத்தடுத்த கட்டங்களில், இந்த பதிலடிகள் தொடரும் என, கூறப்படுகிறது.

இது குறித்து, உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கனிமொழியின் செயல்பாடுகள், வேகமாக உள்ளதால், அது ஆளுங்கட்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என, அ.தி.மு.க., கீழ்மட்ட அளவில் பேச்சு இருக்கிறது. பொது மக்களிடமும் விவரங்கள் திரட்டப்பட்டு, அதை வைத்து, அறிக்கை தயார் செய்து அனுப்பட்டது. அதை வைத்துத்தான், அ.தி.மு.க., தரப்பு, கனிமொழிக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித் துள்ளது.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: