சென்னை:
ஹீரோயினை 70 அடி உயரத்தில் தொங்க விட்டதை பார்த்து அவரது பெற்றோர் கண்ணீர்
விட்டனர் என்றார் மிஷ்கின். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை அடுத்து
மிஷ்கின் இயக்கும் புதிய படம் பிசாசு. இயக்குனர் பாலா தயாரிக்கிறார்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமநாராயணன் வெளியிடுகிறார். அரோல் கோர்லி
இசை. ரவி ராய் ஒளிப்பதிவு. இப்படம் பற்றி மிஷ்கின் கூறியது: நிராதரவாக நான்
கீழே விழுந்த சமயத்தில் கைதூக்கி விட்டார் பாலா. அவரது தயாரிப்பில் பிசாசு
படம் உருவாகிறது. நாகா ஹீரோ. பிரயாகா ஹீரோயின். முக்கிய வேடத்தில் ராதாரவி
நடிக்கிறார். இந்த படத்தை பிரயாகாவுக்கு அர்ப்பணிக்கும் அளவுக்கு கடுமையாக
உழைத்திருக்கிறார்.
பிசாசு கதாபாத்திரத்தில் தோன்றி இருக்கும் அவரை கடுமையாக வேலை வாங்கினேன். 70 அடி உயரத்துக்கு கயிற்றில் கட்டி அந்தரத்தில் தூக்கி நிறுத்தி அங்கிருந்து கீழே விழும் காட்சிகளில் சுவரின் மீதுகூட அவர் மோதி இருக்கிறார். இதனால் பலமுறை காயம் அடைந்திருக்கிறார்.
அவர் ஒவ்வொருமுறை அந்தரத்தில் தொங்கவிடும்போதும் அவரது அப்பா, அம்மா கண் கலங்குவதை பார்த்திருக்கிறேன். பிரயாகா கீழே விழும்போது நான் திரும்பிகூட பார்க்கமாட்டேன். அப்படி பார்த்தால் அடுத்த காட்சி என்னால் படமாக்க முடியாது. பிசாசு கதைக்கான அத்தனை திகிலும் இதில் இருந¢தாலும், இது வழக்கமான ஸ்கிரிப்ட் கிடையாது. இவ்வாறு மிஷ்கின் கூறினார். பாலா கூறும்போது, இனி வருடத்துக்கு 3 படம் தயாரிப்பேன். 1 படம் டைரக்டு செய்வேன். திறமை இருக்கிறது என்று தெரிந்தால் யாராக இருந்தா - See more at: cinema.dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக