வியாழன், 20 நவம்பர், 2014

பாதிரியார் டேவிட் இன்பராஜூக்கு 10 சிறை! மைனர் பெண்ணை கடத்தினார் .

சென்னை,நவ.20 (டி.என்.எஸ்) மேற்கு தாம்பரம் அலமேலுபுரத்தை சேர்ந்தவர் டேவிட் இன்பராஜ் (வயது 35). இவர் அந்த பகுதியில் தேவாலயம் நடத்தி வருகிறார். அந்த தேவாலயத்திற்கு தாம்பரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருடன் ஜெபம் செய்ய செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது அவரது 17 வயது மகளுடன் பாதிரியார் டேவிட் இன்பராஜுக்கு பழக்கம் ஏற்பட்டது.இந்த நிலையில் கடந்த 16-4-2013 அன்று பாதிரியார் டேவிட் இன்பராஜ் சப்-இன்ஸ்பெக்டர் மகளை நாகலாந்து மற்றும் மேற்கு வங்காளத்திற்கு கடத்தி சென்றுள்ளார். இந்த நிலையில் தன்னுடைய மகளை காணவில்லை என்று சப்-இன்ஸ்பெக்டர் கடந்த 17-4-2013 அன்று தாம்பரம் போலீசில் புகார் செய்தார். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் 2 பேரும் பெங்களூரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் கடந்த 17-4-2013 அன்று டேவிட் இன்பராஜை கைது செய்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இன்பமா இருக்கிறதுல பாதிரியாரும் சாமியாரும் ஒன்னுதாய்ன்


இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி ஆனந்தி நேற்று வழங்கிய தனது தீர்ப்பில் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2012 பிரிவு 4-ன் கீழ் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் 363-பிரிவின் கீழ் மைனர் பெண்ணை கடத்திய குற்றத்திற்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து இவை அனைத்தும் ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

அரசு தரப்பில் வக்கீல் ஆனூர் வெங்கடேசன் ஆஜர் ஆனார். தண்டனை பெற்ற பாதிரியார் டேவிட் இன்பராஜுக்கு சோனியா பிரின்சி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: