வெள்ளி, 21 நவம்பர், 2014

மோடியின் நண்பர் அதானிக்கு ஸ்டேட் பாங்க் ரூ.6,200 கோடி கடன்!!

Govt.Bank SBI-scrutiny for loan of 6200cr to Adani not yet done Look at Breakfast Table-SBI Chief with MODI+ADANI

ஆஸ்திரேலியப் பயணத்தின்போது பிரதமருக்கு அடுத்த இருக்கையில் அதானி அமர்ந்திருந்தார். அவர்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு பாரத ஸ்டேட் வங்கித் தலைவரும் சென்றுள்ளார்.
டெல்லி: ஆஸ்திரேலியாவின் கார்மிகேல் நிலக்கரிச் சுரங்க திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக தொழிலதிபர் அதானியின் நிறுவனத்துக்கு ரூ.6,200 கோடி கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்திருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. அதேபோல் மீண்டும் கிஸான் விகாஸ் பத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளதையும் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆஸ்திரேலியப் பயணத்தின்போது பிரதமருக்கு அடுத்த இருக்கையில் அதானி அமர்ந்திருந்தார்.
அவர்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு பாரத ஸ்டேட் வங்கித் தலைவரும் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது அதானி நிறுவனத்துக்கு கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது. இதன்மூலம் அதானிக்கு கடன் கிடைக்கச் செய்து அவருக்கு சாதகமாக பிரதமர் செயல்படுவது போலத் தெரிகிறது. அதானியின் நிறுவனத்தின் திட்டத்துக்கு 5 வெளிநாட்டு வங்கிகள் கடன் வழங்க ஏற்கெனவே மறுத்துவிட்டன. இந்த நேரத்தில் அதானியின் நிறுவனத்துக்கு பாமர மக்களால் முதலீடு செய்யப்பட்ட பணத்தில் இத்தனை மிகப்பெரியத் தொகையை பாரத ஸ்டேட் வங்கி கடனாக வழங்க வேண்டியதன் அவசியம் என்ன? இந்த விவகாரத்தை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பிற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் எழுப்பும்.tamil.oneindia.com/news/india/

கருத்துகள் இல்லை: