வெள்ளி, 21 நவம்பர், 2014

காமராஜரையே தெரியாத பெருச்சாளி கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் பிரமுகரானது ஒரு ரொம்ப கேவலம்,


சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் பேசியபோது, ‘‘காமராஜர் பெயரை சொல்லி ஆட்சியை பிடிக்க முடியாது. காமராஜரை இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. காமராஜர் ஆட்சி அமைப்போம் எனச்சொல்லி தமிழகத்தில் ஒரு போதும் நம்மால் ஆட்சி அமைக்க முடியாது’’ என்றார். காமராஜர் பற்றி கார்த்தி சிதம்பரம் பேசியதற்கு இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் தலைவர்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கார்த்தி சிதம்பரத்தின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:– தமிழகத்தில் காமராஜரை தவிர்த்து விட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் தாங்கள் காமராஜர் ஆட்சியை நடத்தி வருவதாக பேசியுள்ளனர். விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன் முதல் காங்கிரசில் இருந்து நேற்று பிரிந்தவர்கள் வரை அனைவரும் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கின்றனர்.


அப்படி இருக்கும் போது காமராஜரால் வளர்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி அவரை முன்னிறுத்தாமல் இருக்க முடியாது. குழந்தைக்கு தாய் எவ்வளவு முக்கியமோ அதுபோல காங்கிரசுக்கு காமராஜர் முக்கியம். காமராஜர் இல்லாமல் காங்கிரஸ் இல்லை.

கே.வி.தங்கபாலு:– காமராஜர் தனி மனிதர் அல்ல. தத்துவம் அவரை முன் நிறுத்தாமல், அவரது பெயரை சொல்லாமல் நம்மால் ஆட்சிக்கு வர முடியாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

டாக்டர் செல்லக்குமார்:– காமராஜரை முன் நிறுத்தாமல் வேறு ஒருவரை முன் நிறுத்தினால் தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விடும்.

யசோதா (முன்னாள் எம்.எல்.ஏ.):– காமராஜரை பற்றி கார்த்தி கூறிய கருத்து அவரது அனுபவ குறைவை காட்டுகிறது. காமராஜர் ஆட்சி பற்றி தெரியவில்லை என்றால் படித்து தெரிந்து கொள்ளுங்கள். அவருடைய ஆட்சி தமிழகத்தின் பொற்காலம்.

மிக எளிமையான அந்த தலைவர் இறக்கும் போது அவரது பாக்கெட்டில் வெறும் நூறு ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.

இந்த நாட்டின் அரசியல்வாதிகளுக்கு ‘‘ரோல் மாடலாக விளங்கியவர் காமராஜர். முதல்–அமைச்சராக இருந்தபோது வெங்கட்ராமன் தொழில்துறை மந்திரியாக இருந்தார்.

அப்போது தமிழகத்தில் 10 சர்க்கரை ஆலைகள் தொடங்க ஒரு ஆலைக்கு ரூ.10 கோடி வீதம் மொத்தம் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கினார். தொழிற்சாலைக்கு வெளிநாட்டில் இருந்து எந்திரம் வாங்கியபோது அந்த நிறுவனம் ரூ.10 கோடியை கமிஷனாக கொடுக்க முன் வந்தது.

சர்க்கரை ஆலை எந்திரம் கொள்முதல் செய்ததில் ரூ.10 கோடி ரூபாய் கமிஷன் தருவதாகவும் அதை தங்கள் கட்சிக்கு பயன்படுத்தி கொள்ளுமாறும் அந்த நிறுவனம் கூறியதை வெங்கட்ராமன், காமராஜரிடம் தெரிவிக்க, அதற்கு அவர் அளித்த பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இது மக்களுடைய வரிப்பணம். அவை கட்சி நிதிக்கு வரக்கூடாது. கமிஷன் தரும் தொகைக்கு பதிலாக இன்னொரு சர்க்கரை ஆலையை நிறுவி தருமாறு காமராஜர் கேட்டுக் கொண்டார். அதன்படி உருவானதுதான் மோகனூர் சர்க்கரை ஆலை. இப்படி பல உதாரணங்களை காமராஜர் ஆட்சிக்கு எடுத்து கூறலாம்.

காமராஜர் ஆட்சியில் வைகை அணை கட்டப்பட்டது. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவாக அணை கட்டி முடிக்கப்பட்டது. திட்ட மதிப்பீட்டை விட குறைவாக கட்டியதில் மீதமான தொகையை என்ன செய்வது என்று காமராஜர் யோசித்தார்.

பணத்தை திருப்பி ஒப்படைத்தால் பிரச்சினை வரும் என்று கருதி அவர் எஞ்சிய தொகையில் வைகை அணை அருகில் பூங்கா அமைத்தார். அப்படிப்பட்ட தலைவர் காமராஜர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்ததை பெருமையாக கருதுகிறேன்.

காமராஜரின் பொற்கால ஆட்சி மீண்டும் வர வேண்டும். அதை காங்கிரஸ் தர வேண்டும். உறுப்பினர்களை சேர்த்து காங்கிரசை பலப்படுத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஒற்றுமையாக செயல்பட்டால் காமராஜர் ஆட்சி அமைக்க முடியும்.

செல்வப்பெருந்தகை (முன்னாள் எம்.எல்.ஏ.):– காங்கிரஸ் இருக்கும் வரை, ஏன் இந்த மனித இனம் உள்ளவரை காமராஜரை மறந்து விட்டு வாழ முடியாது. அவர் பெயரை குறிப்பிடாமல் அரசியல் இல்லை.

‘கல்வி’ என்ற திருநாமத்திற்கு மூல காரணமே காமராஜர்தான். அப்படிப்பட்ட பெருந்தலைவரை மறந்து விட்டோ, தவிர்த்து விட்டோ அரசியல் பேச முடியாது.

பலரது அறிவுக்கண்களை திறந்ததால்தான் உலகளவில் சிறப்பு பெற்று இருக்கிறார்கள். காமராஜருக்கு நிகர் காமராஜர்தான். வேறு யாருமில்லை. இறந்த பிறகும் வாழ்ந்து கொண்டு இருக்கிற ஒரே தலைவர் காமராஜர்தான்.

தமிழ் வழிக்கல்வி இன்னும் தமிழகத்தில் வாழ்கிறது என்றால் அதற்கு அடிப்படை காரணம் காமராஜர். அதனால் காமராஜரை தவிர்த்து விட்டு அரசியல் பேசுவது சுலபமல்ல.maalaimalar.com

கருத்துகள் இல்லை: