புதன், 19 நவம்பர், 2014

அமைச்சர்கள் விபரங்களை காரடனுக்கு பாஸ்பண்றாய்ங்க! தடுமாறும் CM ஆபீஸ்!

பெரும்பான்மையான அமைச்சர்கள், தங்களது வெளியூர் நிகழ்ச்சிகள் குறித்து, முதல்வருக்கோ அல்லது முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிப்பதில்லை என்பதால், அமைச்சர்களின் கோட்டை வருகை பற்றிய குழப்பம், அதிகாரி கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.முதல்வராக ஜெயலலிதா இருந்த வரையில், அமைச்சர்களின் நிகழ்ச்சிகள், பயணங்கள் பற்றிய அனைத்து விவரங்களும், அவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விடும். அவரது அனுமதிக்கு பிறகே, அமைச்சர்கள், தங்களது சொந்த ஊருக்கு செல்வதை கூட, வழக்கமாக வைத்திருந்தனர்.கோட்டைக்கு ஜெயலலிதா வருகிறார் என்றால், அவர் வருவதற்கு அரை மணி நேரம் முன்பே, அமைச்சர்கள் கோட்டையில் ஆஜராகி விடுவர். அவர் வந்ததும், வரவேற்பதில் துவங்கி, அவர் வீட்டுக்கு புறப்பட்டு செல்லும் வரையில், கோட்டையை விட்டு அமைச்சர்கள், நகர மாட்டார்கள்.சில நாட்களில், ஆய்வுக் கூட்டங்கள், அதிகாரிகள் சந்திப்பு என, ஜெயலலிதா பிசியாக இருந்தபோது, மாலை வரையில் அமைச்சர்கள் கோட்டையிலேயே இருந்ததும் உண்டு.  பினாமியை யாரும் மனுஷனா கூட மதிக்கலை போல இருக்கே... அப்புறம் எப்படி நிர்வாகம் நடக்கும்..கமிஷன் கணக்கு புத்தகம் கார்டனில் மம்மி கையில் தான் இருக்கு.... .
இப்போது, தனக்கு ஏற்பட்ட சோதனையை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் கையில் முதல்வர் பொறுப்பை, ஜெயலலிதா ஒப்படைத்துஇருக்கிறார்.முதல்வர் என்ற முறையில், ஓ.பி.எஸ்., தினமும் காலை, 10:00 மணியளவில் கோட்டைக்கு வந்து விடுகிறார். பணிகளை முடித்து, பகல், 3:00 மணிக்கு தான் மதிய உணவுக்கு வீடு செல்கிறார். பணிகள் இருந்தால், மாலையில் மீண்டும் கோட்டைக்கு வருவதை, அவர் வழக்கமாகி கொண்டுள்ளார்.

சொந்த ஊர்:

விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் கூட, ஓ.பி.எஸ்., தவறாமல் கோட்டைக்கு வந்து, தனது பணிகளை மேற்கொள்கிறார்; ஆனால், அமைச்சர்கள் வருவதில்லை.சனி மற்றும் ஞாயிறுகளில், சொந்த ஊருக்கு செல்வது அமைச்சர்களின் வழக்கம். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது துவங்கிய இந்த நடைமுறை, இப்போதும் நீடிக்கிறது. பலர் வெள்ளிக் கிழமை மாலையே, ஊருக்கு கிளம்பி விடுகின்றனர்.இதற்கிடையில், துறை சார்ந்த நிகழ்ச்சிகள், கூட்டங்கள், தொகுதி விழாக்களிலும், அமைச்சர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சமயங்களில், முன்பு போயஸ் தோட்டத்திற்கு தகவல் தெரிவிப்பது உண்டு. இப்போதும், அதே நடைமுறையை பின்பற்றுகின்றனர்.அதில் தவறில்லை; ஆனால், முதல்வர் என்ற முறையில் ஓ.பி.எஸ்.,க்கு இவர்கள் தகவல் சொல்வதில்லை என்பதால், அமைச்சர்கள் வருகை பற்றிய எந்த தகவலும் எங்களுக்கு தெரிவதில்லை என்கிறது கோட்டை வட்டாரம்.

இது குறித்து, கோட்டை வட்டாரத்தில் கூறப்படுவதாவது:ஜூனியர் அமைச்சர்களில் சிலரை தவிர, மற்ற அமைச்சர்கள் யாருமே, தங்களது நிகழ்ச்சிகள், பயணங்கள் குறித்து, முதல்வர் அலுவலகத்திற்கு தெரிவிப்பதில்லை. சில சீனியர் அமைச்சர்கள், தங்களது துறை செயலருக்கு கூட சொல்வதில்லை.

சிக்கல்:

முக்கியமான விவாதங்களுக்கு, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகளுக்கு அழைப்பு வரும். அந்த நேரத்தில், அமைச்சர்களின் கருத்தை அறிய படாதபாடு பட வேண்டிஇருக்கிறது.அப்போது தான் அமைச்சர்கள் வெளியூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது தெரிய வருகிறது. இது நிர்வாகப் பணியில் சிக்கலை ஏற்படுத்துகிறது. கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, தோட்டத்தில் தகவல் தெரிவித்து விடுகின்றனர். இதனால், முதல்வர் அலுவலகம் கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகிறது.இவ்வாறு, கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: