ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கடன் தொல்லையால், விவசாயிகள் தற்கொலை
செய்து கொண்டிருப்பது ஒரு புறமிருக்க, அம்மாநில எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம்
100 சதவீதம் உயர்த்தப்படுவதுடன், அவர்களுக்கு புதிதாக கார் வாங்கவும்
முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். தற்போது
எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதம் தோறும் ரூ.95 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.
தற்போது உயர்ந்து வரும் விலைவாசியால், இந்த சம்பளம் போதாது எனவும்,
அவர்களின் சம்பளம் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் முதல்வர் அலுவலகம்
கூறியுள்ளது. அம்மாநில சட்டசபையில் 119 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். 40
எம்.எல்.சி.,க்கள் உள்ளனர். இவர்களில் 36 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
இவர்களுக்கான சம்பளம் வேறு.விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள் தெலுங்கானாவுக்கு நிவாரணம் வேண்டும் அது வேண்டும் இதுவேண்டும் என்று பஸ்செல்லாம் கொழுத்தி காட்டு கத்தல் கத்தியது இதுக்குதாய்ன்.
சம்பள உயர்வுக்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவரும், மெகபூபா நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ராஜேந்திர ரெட்டி கூறுகையில், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்படுவதால், அரசை மக்கள் எள்ளி நகையாடுவார்கள் என கூறினார்.
மற்றொரு எம்.எல்.ஏ., ஒருவர் கூறுகையில், தொகுதிக்கு மக்களை சென்று சந்திப்பதற்கு செலவு அதிகமாகிறது. ஒரு நாளைக்கு பெட்ரோலுக்கு மட்டும் ரூ.2000 செலவு செய்யப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தான் முதல்வர் இந்த முடிவை எடுத்திருப்பார் என கூறினார்.
ஆனால், மக்களின் பணத்தை வீணடிக்கக்கூடாது எனவும், எங்களுக்கு மின்சாரம் தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை. சந்திரசேகர ராவ் முதல்வராக பதவியேற்ற பின்னர், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதால், மாநில அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்ததால், சம்பள உயர்வை அறிவிக்கவில்லை. விவசாயிகள் தற்கொலை குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ., சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்திரசேகர ராவின் சொந்த ஊரான மேதக் பகுதியிலிருந்து தற்கொலை செய்து கொண்ட 90 விவசாயிகளின் குடும்பத்தினரை தெலுங்கு தேசம் கட்சியினர் சட்டசபை அருகே பேரணியாக அழைத்து வந்தனர். விவசாயிகள் பிரச்னையில் அரசு கவனம் செலுத்த கோரியும், விவசாயிகள் குறித்து கேள்வி எழுப்பியதால் எம்.எல்.ஏ., சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தவும் தெலுங்கு தேசம் கட்சி அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அக்கட்சி கூறியுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக