செவ்வாய், 18 நவம்பர், 2014

தமிழச்சி தங்கபாண்டியன் பாலாவின் பிசாசுக்கு பாட்டெழுதப்போகிறார் !


பொதுவாக பேய் படங்களில் இருக்கும் சில விஷயங்கள் இதில் இருந்தாலும், இது முற்றிலும் மாறுபட்ட கதை என்று தெரிவித்தார் அதன் இயக்குனர் மிஷ்கின். இருட்டுக்கு பேர் போனவராச்சே மிஷ்கின், சொல்லவா வேண்டும் திரைப்படத்தின் முன்னோட்டமே மிரட்டலாக இருக்கிறது. >மேலும் பேசிய மிஷ்கின், நான் இயக்கிய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தைப் பார்த்துவிட்டு பாலா என்னை பாராட்டினார். படம் எப்படி போகுதுன்னு கேட்டார். சரியா போகலைன்னு சொன்னேன். வருத்தப்பட்டவர், அடுத்தப் படம் எனக்கு பண்ணித்தா, கதைய ரெடி பண்ணு என்று சொன்னார்.
ஒரு படைப்பாளி சரிவில் இருந்த போது அவனை கை கொடுத்து தூக்கிவிட்டா பாலா என்னப்பொருத்த வரை அவர் எனக்கு கடவுளுக்கு நிகரானவர்.>நிருபர்களின் கேள்விகளுக்கு பாலா வழக்கம் போலவே எடக்கு மடக்காக பதில் சொன்னார். ஒரு விதத்தில் அந்த பதில்கள் அனைத்து கலகலப்பாகவே அமைந்தது. பாலா பேசும் போது, ”நான் ஒரு பிசாசு, அவன் ஒரு பிசாசு, இரண்டு பேரும் சேர்ந்தால் ‘பிசாசு’ படம் தான் எடுக்க முடியும். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அவன் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது, அதனால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். மிஷ்கின் அதிகமாக பேசுவான், தம்பி... பேச்சைக் கொறைச்சுக்கோ, செயல்ல காட்டு, நாம் அதிகம் பேசக்கூடாதுன்னு அவனிடம் நான் சொன்னேன். என் தயாரிப்பில் நிச்சயம் புதிய திறமைகளுக்கு வாய்ப்புக் கொடுப்பேன். திறமையுள்ளவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் போது திறமையற்றவர்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்” என்றும் அவ்வப்போது சில வத்திக்குச்சிகளை கிழித்துப் போட்டார்.>உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா என்று நேரடியான கேள்விக்கு, அவர் கடைசி வரை, தெளிவான பதிலை கொடுக்கவில்லை. இந்தப் படத்தின் மூலம் கவிஞராக அறியப்பட்ட தமிழச்சி தங்கபாண்டியன் பாடலாசிரியராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. nakkheeran,in

கருத்துகள் இல்லை: