தருமபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் குழு
பச்சிளங்குழந்தைகள் பிரிவில் ஆய்வு நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் உடல்
நலன், பாதுகாப்பு குறித்து ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். எழும்பூர் குழந்தைகள்
நல மருத்துவமனை மருத்துவர் குமுதா தலைமையில் ஒரு குழு மற்றும் மருத்துவக்
கல்வி இயக்குநர் கீதாலட்சுமி தலைமையில் மேலும் ஒரு குழு ஆய்வு நடத்தி
வருகிறது. தருமபுரி மருத்துவமனையில் 10 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தினகரன்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக