tகொலை வழக்கில் சிக்கிய சாமியாரை கைது செய்யவிடாமல் வன்முறை! போலீசார் மீது துப்பாக்கி சூடு! >அரியானா மாநிலத்தில் சாமியார் ஒருவரின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக பதட்டம் நிலவுகிறது.அரியானாவில்
உள்ள கிசார் நகரில் ஆசிரமம் அமைத்துள்ள சாமியார் ராம்பால் மீது கடந்த
2006ம் ஆண்டு நடைபெற்ற கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த
வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள அவர், உடல்நிலையை காரணம் காட்டி விசாரணையில்
ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அதிருப்தி அடைந்த உயர்நீதிமன்றம்
சாமியாருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை 3வது முறையாக ஜாமினில் வெளிவர
முடியாத கைது வாரண்ட் பிறப்பித்ததோடு, அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு
மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து
செவ்வாய்க்கிழமை ஆசிரமத்துக்குள் நுழைய முயன்ற போலீசார் மீது, நாட்டு
துப்பாக்கிகள் மூலம் சுட்ட சாமியாரின் ஆதரவாளர்கள், பெட்ரோல்
குண்டுகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர்.
நிலைமையை
சமாளிக்க தடியடி நடத்திய போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும்,
தண்ணீரை பீய்ச்சியடித்தும் அங்கிருந்தவர்களை விரட்டி அடித்தனர்.
சாமியாரின்
ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் படுகாயம்
அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது. பதற்றம்
அதிகரித்ததையடுத்து, ஆசிரமத்தை விட்டு வெளியேற சாமியாரின் ஆதரவாளர்களுக்கு
போலீசார் கெடு விதித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக