பள்ளி கல்வித் துறை அமைச்சர் பதவியில் இருந்து வைகைசெல்வன்
நீக்கப்பட்டதற்கு பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைசெல்வன் நேற்று மாலை அமைச்சரவையில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அவரிடமிருந்த மாநில இளைஞர் பாசறை செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்ததும், அதை ஒப்புக்கொள்ளும் வகையில் கோர்ட்டில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. megalomaniac
காவலாளி, துப்புரவு பணியாளர் காலியிடங்களில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக, திருப்பரங்குன்றம் நிலையூரை சேர்ந்த கணேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கல்வி அதிகாரிகளுக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்தனர். உசிலம்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி தாக்கல் செய்த பதில் மனுவுடன் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலும் இணைக்கப்பட்டிருந்தது.
அந்த பட்டியலில் தேர்வானோர் பெயருடன், அவர் யாருடைய சிபாரிசில் தேர்வு செய்யப்பட்டார் என்ற விபரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொரு கோப்பில், ‘அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பரிந்துரைபடி பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்‘ என குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அதே நேரத்தில் மதுரை, மேலூர் கல்வி மாவட்டங்களில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்களில், வில்லங்கமான பக்கங்கள் முன்கூட்டியே எடுக்கப்பட்டிருந்தது. உசிலம்பட்டி ஆவணத்தை படித்து பார்த்த நீதிபதி, ‘குறிப்பு எழுத யார் உத்தரவிட்டது’ என கல்வி அதிகாரியிடம் கேட்டதற்கு, சென்னையில் இருந்து போனில் தகவல் வந்தது, யாரென தெரியாது‘ என்றார். இதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது என நீதிபதி கேட்டார். இது பெரிய விஷயமாக வெடிப்பதால், இதுவும் வைகைசெல்வன் பதவிக்கு ஆபத்து ஏற்படுத்திய காரணமாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அவர் மீது சக அமைச்சர்கள், கட்சியினரை மதிக்காமல் நடப்பது, ஆசிரியர்கள் இடமாற்றம், பள்ளிகளுக்கு தரம் உயர்த்துவதில் அதிகளவில் பணம் பெறுவது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இருநாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற வைகைசெல்வன், 50க்கும் மேற்பட்ட கார்களில் பவனி சென்றுள்ளார். அவருக்கு யானையை வைத்து மாலை போட்டு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விபரமும் புகாராக சென்றது. விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தேர்தலில், 2 கவுன்சிலர் மட்டுமே ஆதரவாக இருந்த நிலையில் தனது ஆதரவாளரை தேர்தலில் நிறுத்தி பிரச்னை ஏற்படுத்தி கோர்ட்டு வரை சென்றார் என ஒரு புகார் உள்ளது. இது போன்ற பல்வேறு புகார்கள் அடுத்தடுத்து மேலிடத்திற்கு சென்றதால் அவரை நீக்கியதாக கூறப்படுகிறது. -S

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக