டெல்லியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ஒருவர், தனது ஆண்
நண்பருடன் பேருந்து ஒன்றில் சென்றபோது, ஆறு பேர் கொண்ட கும்பலால்
தாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரையும் சரமாரியாகத்
தாக்கிய அந்தக் கும்பல் இருவரையும் பின்னர் சாலையோரத்தில் வீசிச் சென்றது.
இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் இரண்டு வாரங்கள் சிகிச்சைக்குப்பின்
சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்து போனார்.
அவரை கற்பழித்த கும்பல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை
நடைபெற்று வருகின்றது. விசாரணையின்போது ஒரு குற்றவாளி திகார் சிறையில்
தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு குற்றவாளி சிறுவன் என்று
நிரூபிக்கப்பட்டதால், அவன் இளம் குற்றவாளியாகக் கருதப்பட்டு சீர்திருத்த
மையத்தில் அடைக்கப்பட்டான். அவன் மீதான வழக்கை விசாரித்த சிறார் கோர்ட்,
அவனை மூன்று வருடங்கள் சீர்திருத்த மையத்தில் அடைக்க வேண்டும் என்று
சமீபத்தில் உத்தரவிட்டது.
மற்ற 4 பேர் மீதான வழக்கு டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு வாதம் மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் முடிவடைந்ததையடுத்து வரும் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூடுதல் அமர்வு நீதிபதி யோகேஷ் கன்னா அறிவித்தார்.
4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு எதிரான கொடிய குற்றத்திற்காக வழங்கப்பட உள்ள இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்malaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக