Billions of
dollars are made by Pharmaceuticals selling products-- ostensibly sold
to reduce
cholesterol and by extension heart disease. Cayenne could
eliminate all these illnesses and that's why the medical establishment
and big Pharma doesn't want people to know about it. In fact the
'medical fraternity will demonise this wonderful natural healing fruit'
in their efforts to dissuade you from using it.
மிளகாய்க்கு காரத்தைக் கொடுக்கும் கேப்சைசின் (capsaicin) என்னும் ஒரு வேதியல்
பொருளுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் உண்டு என்பது முந்தைய சில
ஆய்வுகள்மூலம் தெரிந்த செய்தியே! ஆனால், கேப்செய்சின் குறித்த இதுவரையிலான
ஆய்வுகளில், மிகவும் அதிக அளவிலான, குறுகிய கால கேப்செய்சின்
பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்த, ஆனால் சர்ச்சைக்குறிய
முடிவுகளே எட்டப்பட்டது என்றும், சமீபத்திய இந்த ஆய்வின்மூலம், நீண்ட
காலமாய் உண்ணப்படும் மிளகாய் கலந்த உணவில் இருக்கும் கேப்செய்சின்
அளவுகளால், ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று முதல்முறையாக
கண்டறியப்பட்டுள்ளது என்கிறார், சீனாவின் மூன்றாவது ராணுவ மருத்துவ
பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் திரு. ஷிம்மிங் ஷு! (Zhiming Zhu of Third
Military Medical University in Chongqing, China) தியை
அதிகரிக்கிறது. காற்று வடிவிலான இந்த வேதியல் பொருள் ரத்த நாளங்களில்
ஏற்படும் காயங்களுக்கு எதிராக செய்ல்பட்டு ரத்த நாளங்களைப் பாதுகாக்கும்
திறன் கொண்டது! மேலும் இந்த வினைகள் எல்லாம் சேர்ந்து, ரத்த நாளங்களைத்
தளர்ச்சியடையச் செய்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன என்கிறார் ஷிம்மிங்
ஷூ!
ரத்த
நாளங்களைச் சுற்றியுள்ள ஒருவகை புரதமான transient receptor potential
vanilloid 1 (TRPV1) என்னும் புரதத்தை தூண்டும் கேப்செய்சின், நைட்ரிக்
ஆக்சைடு என்னும் ஒரு வகை வேதியல் பொருளின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
காற்று வடிவிலான இந்த வேதியல் பொருள் ரத்த நாளங்களில் ஏற்படும்
காயங்களுக்கு எதிராக செய்ல்பட்டு ரத்த நாளங்களைப் பாதுகாக்கும் திறன்
கொண்டது! மேலும் இந்த வினைகள் எல்லாம் சேர்ந்து, ரத்த நாளங்களைத்
தளர்ச்சியடையச் செய்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன என்கிறார் ஷிம்மிங்
ஷூ!
ரத்தக் கொதிப்புள்ள எலிகளில் நடத்தப்பட்ட
இந்த ஆய்வில், நீண்ட காலமாய் உண்ணப்படும் மிளகாய் கலந்த உணவிலிருக்கும்
கேப்செய்சின் அளவுகளுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் உள்ளது என்று
கண்டறியப்பட்டாலும், இதே மாதிரியான ஒரு ஆய்வை, நீண்டகாலமாய் அதிகம்
மிளகாய் கலந்த உணவுகளை உண்டுவரும், ஆயிரக்கணக்கான மக்களில் மேற்கொண்டு,
இம்முடிவை நிரூபிக்கவேண்டியது அவசியம் என்றும், ஆனால், அத்தகைய ஆய்வு
ஒன்று நடத்தப்பட்டால் நிச்சயம் முடிவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்
என்பதற்க்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்கிறார் ஷூ!
அது எப்படி?
மிளகாய் கலந்த உணவுகளை அதிகம் உண்ணும்
பழக்கமுள்ள மக்கள் வாழும், தென்சீன பகுதிகளான சிஷென், கோஷொ, யுன்னான்,
ஹூனான் மற்றும் சாங்கிங் ஆகிய பகுதிகளில் ரத்தக்கொதிப்புடன் வாழும் மக்கள்
10-14% என்றும், ஆனால் மிளகாய் அதிகம் சாப்பிடாத உணவுப்பழக்கவழக்கமுள்ள
மக்கள் வாழும் வடகிழக்கு சீன பகுதிகளில் 20% என்றும் கூறுகிறார் ஷூ!
அதெல்லாம் சரிதான், ஒரு நாளைக்கு எத்தனை மிளகாய் சாப்பிட்டா ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்?
அதாங்க தெரியாது! அட, என்ன அப்படிப்
பார்க்குறீங்க? அப்படீன்னு நான் சொல்லலீங்க. நம்ம ஷூ தான் சொல்றாரு.
ஆமாங்க, ஒரு நாளைக்கு கேப்செய்சின் இருக்கும் எத்தனை மிளகாய் உண்டால் ரத்த
அழுத்தத்தைக் குறைக்க/கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்து
சரியான/திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வர, மேலும் ஆய்வுகள் செய்தால்தான்
கண்டறிய முடியும் என்று சொல்கிறார் ஷூ!
“அடப் போங்கப்பா…., தங்கவேலு சமையல்
கேக்குற எல்லாத்துக்கும், “ஓ…. தெரியுமே”ன்னு சொல்லிட்டு, சரி அடுத்து
என்னன்னு கேட்டா…..அதாங்க எனக்குத் தெரியாதுன்னு சொல்ற அவர் மனைவி
மாதிரியில்ல இருக்கு நம்ம ஆய்வாளர் ஷூ சொல்றது” அப்படீன்னு ஒன்னும்
உணர்ச்சிவசப்படாதீங்க! கூடிய சீக்கிரமே நம்ம ஷூ, நாம எதிர்பார்க்குற அந்தக்
கேள்விக்கான பதிலோட ஒரு ஆய்வறிக்கையை வெளியிடுவாருன்னு நம்புவோம்! padmahari.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக