‘விஸ்வரூபம்’ படத்தின் வெற்றியைத்
தொடர்ந்து ‘விஸ்வரூபம்-2’ படத்தை
விரைவில் திரைக்கு கொண்டு வரவேண்டும் என்று அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் அதிதீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் கமல்.
இப்படத்திற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் கமல் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் லிங்குசாமி தயாரிக்கும் இந்த படத்தை முதலில் ரமேஷ் அரவிந்த் இயக்குவதாக இருந்தது. /> ஆனால், தயாரிப்பாளர் லிங்குசாமியோ, படத்தை நீங்களே இயக்குங்கள் என்று கமலிடம் கேட்டுக் கொண்டாராம். அதற்கு கமலும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். எனவே, மூன்று மொழிகளிலும் உருவாகவிருக்கும் இந்த படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கவும் செய்கிறார் கமல். ஒவ்வொரு
மொழியிலும் பிரபலமான முன்னணி நடிகர்கள் கமலுடன் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ‘மூ’ என்று ஒற்றை எழுத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள். விஸ்வரூபம்-2’ வெளியான பிறகே இப்படம் குறித்து மூச்சு விடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம் கமல். தொலைந்து போன கண்டங்களை பற்றி ஏராளமான கதைகள் உலகின் பல பாகங்களிலும் தொன்று தொட்டு இருந்து வருகிறது , நமது சிலப்பதிகாரத்தில் கூட வரும் குமரி கண்ட இதிகாசங்கள் இந்த வகையை சார்ந்ததுதான் , அட்லாண்டில் லெமுரியா சிலபதிகாரம் எல்லாம் சேர்த்து ஒரு கமல் பிராண்ட் கொக்டெயில் வருமோ ?,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக