சென்னை:இந்த மாதம் மட்டும் 16 படங்கள் ரிலீசுக்கு
மோதுவதால் தியேட்டர்
பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு தினங்களில் முன்பெல்லாம் 8 அல்லது 10 படம் ரிலீஸ் ஆகும். பிறகு அது மெல்ல மெல்ல குறைந்து 3 அல்லது 4 படங்களில் வந்து நிற்கிறது. சமீபகாலமாக பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் என்றால் இளம் நடிகர்கள், பட்ஜெட் படங்களின் ரிலீசை தள்ளி வைக்கின்றனர். இப்படி தள்ளி வைத்த படங்கள் தற்போது ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் ரிலீசுக்கு போட்டி போடுகின்றன. எதிர்வரும் தீபாவளி, பொங்கலுக்கு ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்கள் ரிலீசுக்கு தயாராகி கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் இந்த மாதமே தங்களது படங்களை ரிலீஸ் செய்து வசூலை பார்க்க எண்ணும் தயாரிப்பாளர்கள் களத்தில் குதித்திருக்கின்றனர். 16 படங்களை ரிலீஸ் செய்ய போட்டி ஏற்பட்டுள்ளதால் தியேட்டர்கள் பிடிப்பதிலும் கடும் போட்டி நிலவுகிறது.
சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்று ரிலீஸ் ஆனது. விஷால் நடித்துள்ள ‘மதகஜ ராஜா நாளை ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர ஆர்யா & நயன்தாரா நடித்துள்ள ‘ராஜா ராணி, பிரபுதேவாவின் ‘களவாடிய பொழுதுகள், ராம நாராயணன் இயக்கத்தில் டி.ராஜேந்தர் நடித்திருக்கும் ‘ஆர்யா சூர்யா, ஷாம் நடிக்கும் ‘6, விஜய் சேதுபதி நடிக்கும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பிரசன்னா நடிக்கும் ‘கல்யாண சமையல் சாதம், மிஷ்கின் இயக்கியுள்ள ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நாகராஜ் இயக்கியுள்ள ‘மத்தாப்பூ, சிவா நடித்துள்ள ‘யா யா மற்றும் மவுன மழை, அஞ்சல் துறை, கோப்பெருந்தேவி, சுட்ட கதை, மூடர் கூடம் ஆகிய படங்கள் போட்டியில் குதித்துள்ளன. - .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக