புதுடெல்லி:
பிரதமர் கனவு காணவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர
மோடி தெரிவித்த நிலையில், விரைவில் பிரதமர் வேட்பாளராக அவரை அறிவிக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு கட்சியின் மூத்த ததலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து மோடிக்கு அந்த பதவியை வழங்கினார். மேலும் மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் பாரதிய ஜனதாவை வலியுறுத்தி வந்த நிலையில் தாம் பிரதமர் கனவு காணவில்லை என்று தெரிவித்த ஆவர், குஜராத் முதல்வராக 2017ஆம் ஆண்டு வரை நீடிக்க விரும்புவதாக கூறினார். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தொடர் வறுபுறுத்தலுக்கு பதில் அளித்துள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சி தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அடுத்த வாரம் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இதற்கான அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக