சனி, 7 செப்டம்பர், 2013

நாத்திகவாதம் பேசுபவர்களுக்கு கோவில்களில் நிகழ்ச்சி நடத்த தடை! அதிமுக அரசின் BJP பக்தி

கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, கோவில் நிலங்களை வாடகைக்கு கொடுப்பதற்கும், மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவதற்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இவற்றில், ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ள கோவில்கள் எண்ணிக்கை, 234.கோவில்களுக்கு, சொந்தமாக திருமண மண்டபங்கள், பொது நிகழ்ச்சிக்கான மண்டபங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன.
இதில், நிகழ்ச்சிகள் நடத்த எந்த கட்டுப்பாடும் இல்லை.இழுக்கு:கடந்த மாதம், திருவாரூர் அருகே உள்ள கிராமத்தில், தி.க.,வினர் நிகழ்ச்சிக்கு கோவில் மண்டபம் அளிக்கப்பட்டது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.இது குறித்து, "ஜோதிமலை இறைபணி திருக்கூடம்' சார்பில், முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் உள்ள தகவல் குறித்து, அதன் நிர்வாகிகள் கூறியதாவது: திருவாரூர் மாவட்டம், கமலாபுரம் அருகிலுள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் உள்ள சிவாலயத்துக்கு உட்பட்ட திருமண மண்டபத்தில், திராவிடர் கழக கூட்டம், சமீபத்தில் நடந்தது. இப்பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல இடங்களில், கோவில்களுக்குச் சொந்தமான இடங்களில், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு, இடம் தரப்படுகிறது. ஆன்மிகத்துக்கு இழுக்கான இச்செயலை, அறநிலையத்துறை அனுமதிப்பது தவறு. இதுபோன்ற மண்டபங்களை, பக்தர்கள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு விட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து, கோவில் செயல் அலுவலர்களுக்கும், புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அனுமதிக்காதீர்கள்:

இனி, வரும் காலங்களில், கோவிலுக்குச் சொந்தமான திருமண மண மண்டபங்கள், கோவிலை சுற்றியுள்ள வளாகத்தில், இந்து சமயம் வளர்ச்சி சம்பந்தப்படாத கொள்கை உடையவர்களுக்கும், நாத்திகவாதத்தை கொள்கையாக கொண்டவர்களுக்கும் இடம் அளிக்க கூடாது. மது, மாமிசம் பயன்படுத்தும் கூட்டங் களுக்கும் இது பொருந்தும். மண்டபங்களை சமய வழிபாடு, தெய்வீக தன்மைக்கும், வளர்ச்சிக்கும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் மட்டுமே, அனுமதிக்க வேண்டும்; வாடகைக்கு கொடுக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: