புதன், 4 செப்டம்பர், 2013

ஜெ, சொத்துகுவிப்பு வழக்கில் ஒய்வு பெறுவதற்குள் தீர்ப்பு எழுத நீதிபதி அவசரம் ! இன்னும் எத்தனை வாய்தாவோ

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில்
நடந்து கொண்டிருந்த நிலையில், ஆச்சார்யா தனது அரசு சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கர்நாடக அரசு மூத்த வக்கீல் பவானிசிங்கை அரசு சிறப்பு வக்கீலாக நியமனம் செய்தது. திமுக எதிர்ப்பை தொடர்ந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், தன்னை அரசு சிறப்பு வக்கீல் பதவியிலிருந்து நீக்கம் செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பவானிசிங் மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கின் திருப்புமுனையாக பவானிசிங்கை கர்நாடக அரசு திரும்பப்பெற்றதை எதிர்த்து ஜெயலலிதாவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அடங்கிய டிவிசன் பெஞ்சில் ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் லலித் ஆஜராகி, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங்கை மீண்டும் அரசு வக்கீலாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்றார். இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு 31 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கர்நாடக அரசு மற்றும் அன்பழகன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான  சாட்சி விசாரணை நடைபெற்ற போது அரசு வக்கீல் பவானி சிங் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. சாட்சியங்களிடம் விசாரணை முடிந்து குறுக்கு விசாரணையை 133 பேரிடம் நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் 99 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசு வக்கீல் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

வழக்கை விசாரித்த நீதிபதியும், தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு இந்த வழக்கில் தீர்ப்பை அளித்திட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் அரசு வக்கீல் தனது கடமையை செய்ய தவறி விட்டார். இதனால்தான் கர்நாடக அரசு, அவரை அரசு வக்கீல் பதவியிலிருந்து திரும்ப பெற்றது. எனவே பவானி சிங்கை அரசு வக்கீல் பணியிலிருந்து நீக்கம் செய்ததை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது

கருத்துகள் இல்லை: