திங்கள், 2 செப்டம்பர், 2013

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அதிர்வு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி ஜகர்தா: இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள பரத்தயா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நேற்று இரவு 8.52 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் 132 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு தைமூரின் தலைநகரமான திலியில் உள்ள வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். மேலும் கடற்கரை அருகே வசிப்போர் உயரமான இடங்களுக்கு ஓடினர். இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான அசேவில் 9.1 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி ஏற்பட்டதால் 14 நாடுகளில் 230,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: