ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

EVKS இளங்கோவனின் திமுக எதிர்ப்பு காங்கிரசின் தலைவிதி ? சில நோய்களுக்கு மருந்து இல்லை

ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சின்னாரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.இதில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் தருவதுதான் அரசின் தலையாய கடமை. இதற்காகதான் மத்திய காங்கிரஸ் அரசு 87 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது. ஆனால் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவந்ததால்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதாக எதிர்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். ஊழலை பற்றி யார் பேசினாலும் அதற்கு தகுதி வேண்டும்.

இப்போதைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விரைவில் சாசெய்யப்படும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் தி.மு.க. தலைவர் கூட்டணி பற்றி பேசுவார். காங்கிரஸ் தயவை நாடுவார். வெற்றி பெற்ற பின்னர் கூட்டணி இல்லை என்பார். கூட்டணியில் இருந்தபோதிலும் காங்கிரசை கருணாநிதி விமர்சித்தார். காரணம் காங்கிரசில் தட்டிக்கேட்க ஆளில்லை.
இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது. நேரு பிரதமராக இருந்ததில் இருந்து இன்று வரை இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் பாடுபடுகிறது. தற்போது கூட இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ. 48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தை பிரித்தால் நான்தான் அதிபராக இருப்பேன் என்று பிரபாகரன் அடம்பிடித்ததால் பிரிக்க முடியாமல் போய்விட்டது.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

கருத்துகள் இல்லை: