புதன், 4 செப்டம்பர், 2013

கனிமொழி ராகுல் காந்தி சந்திப்பு கூட்டணியில் தே மு தி கவை சேர்க்க ராகுல் விருப்பம் ?

டெல்லி: லோக்சபா தேர்தலில் திமுக- தேமுதிக- காங்கிரஸ் இணைந்து கூட்டணி அமைப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியை அண்மையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் அண்மையில் ராகுல் காந்தி தமது இல்லத்தில் கனிமொழியுடன் கூட்டணி குறித்து விரிவாக ஆலோசித்து உள்ளார். அப்போது திமுக- காங்கிரஸ் அணியில் 10% வாக்குகள் உள்ள தேமுதிகவும் இணைந்தால் வலுவான அணியாக இருக்கும் என்று ராகுல் காந்தி, கனிமொழியிடம் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த சந்திப்பு பற்றி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க கனிமொழி மறுத்துள்ளார்.
மேலும் இது சாதாரணமான சந்திப்புதான்.. இதில் எந்த ஒரு அரசியல் முக்கியத்துவம் இல்லை என்றும் கனிமொழி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்புக்குப் பின்னர்தான் ஆகஸ்ட் 25-ந் தேதி விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு ராகுல் காந்தி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அத்துடன் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் திருச்சி சிவாவின் இடத்தை திமுக கோராமல் விட்டுக் கொடுத்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாகவும் கனிமொழியிடம் ராகுல் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது
  tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: