ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

பாமக திமுகவுக்கு SOS Call

தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., முதலில் இடம் பெற, துண்டு விரித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை, மணிமேகலையுடன் ஒப்பிட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியது மூலம், மீண்டும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை புதுப்பிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தரப்பில், தே.மு.தி.க., வுடன் கூட்டணி அமைக்க விரும்புவதால், தி.மு.க., கூட்டணியில் இன்னும் இறுதி வடிவம் முழுமை அடையாமல், இழுபறியாக உள்ளது. அதேசமயம், தி.மு.க., - தே.மு.தி.க., காங்கிரஸ் என, "மெகா' கூட்டணி அமைய வேண்டும் என, சில தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர் ஆந்திர பவனில் ஆலோசனை:சமீபத்தில், டில்லி ஆந்திர பவனில், தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது, காங்கிரஸ் எம்.பி., ஒருவர், "காங்கிரசை கருணாநிதி விமர்சனம் செய்கிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு தி.மு.க., - எம்.பி., ஒருவர், "எங்கள் தலைவர் அப்படி தான் பேசுவார். ஆனால், அவரே பாராட்டி, கூட்டணிக்கு வழியும் வகுப்பார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்குள், தே.மு.தி.க., வை இழுக்க வேண்டும்' என்றார்.


ராகுலிடம் ஒப்படைப்பு:

உடனே, காங்கிரஸ் எம்.பி., "ராகுலிடம் விஜயகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தே.மு.தி.க., இளைஞர் அணி மாநில தலைவர் சுதீஷ் மற்றும் பொருளாளர் இளங்கோவன் ஆகிய இருவரும், தே.மு.தி.க., போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் பெயர் பட்டியலை ராகுலிடம் ஒப்படைத்துள்ளனர்' என்றார்.இப்படி ஒரு கூட்டணி ஆலோசனை ஆந்திர பவனில் சமீபத்தில் நடத்தப்பட்டதாக, காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.இந்நிலையில், கருணாநிதிக்கு பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி ஒரு கடிதம் எழுதினார். அதில் அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, அனைத்து அரசியல் கட்சிகளும், ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். தனித்து போட்டி எனக் கூறிக் கொண்டிருந்த, பா.ம.க., திடீரென தி.மு.க., உதவியை நாடியதற்கு காரணம், லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற விரும்புகிறது. அதனால் தான், தி.மு.க., கூட்டணியில் இடம் பெறவிரும்பி, பா.ம.க., முதல் துண்டு விரித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டம்:



இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: ஆளுங்கட்சியின் நெருக்கடியை பா.ம.க.,வினால் சமாளிக்க முடியவில்லை. குருவுக்கு தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் பிரமுகர்களை தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும், ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழியும் தி.மு.க., பக்கம் இழுத்து வருகின்றனர். இதர ஜாதிக்கட்சிகளின் ஆதரவும், பா.ம.க., எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை என்பதால், தி.மு.க., வின் கூட்டணியை பா.ம.க., நாடுகிறது."2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு தொடர்பாக விசா ரணை நடத்தி வரும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் தி.மு.க., உறுப்பினர்களை நியமிக்காமல், காங்கிரஸ் உறுப்பினர்கள நியமனத்துக்கு, தி.மு.க., தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை மீண்டும் புதுப்பிப்பதற்காக தான், சோனியாவை கருணாநிதி புகழ்ந்து வருகிறார். சோனியா தரப்பில் காய் நகர்த்தி, தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ம.க., போன்ற கட்சிகளுடன், மெகா கூட்டணியை அமைக்க தி.மு.க., தரப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இறுதி வடிவம் பெறாமல், இழுபறியாக தான் உள்ளது.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -dinamalar.com 

கருத்துகள் இல்லை: