ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

200 கோடி மோசடி ! சிங்கம் 2 வேங்கை போன்ற பல படங்களில் நடித்த மோசடி நடிகன் ! ஏமாந்தவர்களில் புவனேஸ்வரியும் உண்டு

ஏலத்தில் வரும் சொத்துகளை வாங்குவதாக ரூ.200 கோடி மோசடி: கில்லாடி சிக்கினார்

சென்னை வடபழனி இந்திராபவன், முஸ்தான் அலி கார்டனை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (43) இவர் கடந்த வாரம் போலீஸ் கமிஷனர்  அலுவலகத்தில் புகார் அளித்தார். நுங்கம்பாக்கத்தை சேர்ந்த விஜய் தண்டபாணி (41) என்பவர் சென்னையில் ஏலத்தில் விடப்படும் சொத்துக்களை குறைந்த விலைக்கு வாங்கி, அதை விற்பனை  செய்யும்போது அதிக லாபம் கிடைக்கும் என்றும், அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்ப 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை கமிஷன் தருவதாக கூறினார்.  அதை நம்பி நான் ரூ.75 லட்சம் பணம் கொடுத்தேன். ஆனால் சொன்னபடி கமிஷனும் தர வில்லை பணத்தையும் தரவில்லை. இதுகுறித்து விஜய்  தண்டபாணியிடம் கேட்ட போது உனக்கு பணம் கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டுகிறார். எனவே அவரிடம் இருந்து ரூ.75 லட்சத்தை மீட்டு தர வேண்டும்  என்று புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் விஜய் தண்டபாணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில்  இந்தியன் டெப் மேனஜ்மெண்ட் என்ற நிறுவனம் நடத்தி பலரிடம் பணம் பெற்று சுமார் ரூ.4 கோடிக்கு மேல் ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், அவரிடம்   பலர் கோடி கணக்கில் தங்களுடைய ஓய்வு பெற்ற பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நேற்று விஜய்  தண்டபாணியை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பலரிடம் கோடிக்கணக்கில் விஜய் தண்டபாணி  பணம் பெற்று ஏமாற்றியுள்ளதால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அண்ணா நகரை சேர்ந்த திரைப்பட நடிகை புவனேஸ்வரி (எ) பாக்யஸ்ரீ கூறியதாவது: என்னிடம் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த விஜய் தண்டபாணி இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஏலத்தில் விடும் நிலங்களை வாங்கி விற்பதாகவும்,  தான் ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும் கூறினார். இதில் நீங்களும் பங்கேற்றால் 4 முதல் 6 சதவீதம் கமிஷன் தருவதாக கூறினார். அதன்படி நான் ரூ.20  லட்சத்தை விஜய் தண்டபானியிடம் கொடுத்தேன். அவர் பணத்தை பெற்றுக் கொண்டு அவர் கூறியபடி எனக்கு கமிஷன் எதுவும் தரவில்லை. பணத்தை கேட்ட  போது, ‘கோவையில் சாட்டிலைட் சிட்டி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் உள்ளது. அதில் உனக்கு பங்கு தருகிறேன்’’ என்றார். மேலும் இதுபோன்று சினிமா தயாரிப்பாளர், ரயில்வே அதிகாரி  உள்ளிட்டோரும் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால் பணத்துக்கு சரியான  அளவில் அவர் உத்தரவாதம் அளிக்கவில்லை. திடீரென கடந்த ஓராண்டுகளாக தலைமறைவாகிவிட்டார். நாங்கள் அவரை தேடிபார்த்தோம். எங்களிடம்  சிக்கவில்லை.

இந்நிலையில் இன்று மதியம் நுங்கம்பாக்கம் பகுதிக்கு அவர் வந்ததாக கூறினர். இதையடுத்து அவரை நாங்கள் கையும் களவுமாக பிடித்து மத்திய குற்றப்பிரிவு  போலீசாரிடம் ஒப்படைத்தோம். இதுவரை அவர் 200க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம், திரைப்பட தயாரிப்பாளர்களிடம் ஏமாற்றி பணம் பெற்றுள்ளார்.  பிரபல தொழிலதிபர் மகன் பணம் போட்டுள்ளார். இதுபோன்று 100க்கும் மேற்பட்டோர் விஜய் தண்டபாணியிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். இதுவரை  கணக்கெடுத்தால் ரூ.200 கோடி அளவுக்கு அவர் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து 4 மாதங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நான் புகார் அளித்தேன். அந்த புகாரின்படி போலீசார் எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. நாங்களே அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். மேலும் அவர் இந்தியா முழுவதும் ஆயிரம் கோடியில் சாட்டிலைட் சிட்டி  அமைக்கப்போவதாக கூறியதால் அவரை முழுமையாக நம்பி ஏமாந்து போனோம். பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றார். இவர் சிங்கம் 2, வேங்கை, மதராசப்பட்டினம் படங் களில் நடித்தவர் dinakaran.com

கருத்துகள் இல்லை: