ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

சிரியா ரசாயன ( sarin) ஆயுதங்கள் பயன்படுத்தியதா?

விளாடிவாஸ்டாக்:சிரியாவில் அதிபர் ஆசாத் படை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்கள் 1400 பேருக்கும் மேல் பலியிட்டுள்ளது என்று ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதியாக கூறியதை அடுத்து அமெரிக்கா, சிரியாவின் மீது போர் தொடுக்க செனட் சபையின் ஒப்புதலுக்காக அதிபர் ஒபாமா காத்துகிடக்கிறார். இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் கூறியதாவது:- ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்:>சிரியா ரசாயன ஆயுதங்களை வைத்துள்ளது அதை பொதுமக்கள் மீது பயன்படுத்தியுள்ளது என்பதற்கு அமெரிக்கா ஆதாரங்கள் வைத்திருந்தால் அதை ஐ.நா. ஆய்வாளர்களிடமும் ஐ.நா. பாதுகாப்பு சபையிடமும் சமர்பிக்க வேண்டும். ஆதரவை பெறுவது யார்? என்னை பொருத்தவரை, சிரியா பிரச்சினையில் மற்ற நாடுகளை இழுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வேறொன்றுமில்லை. இதன்மூலம் உலகில் சக்திவாய்ந்த நாடுகளின் ஆதரவை பெறுவது யார் என்பதே.


சிரியா பொதுமக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாமல் நோபல் பரிசு பெறுவோரின் பட்டியலில் ஒபாமாவும் இடம்பெறவேண்டும்.
எனவே சிரியா மீது ஒபாமா, தாக்குதல் நடத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். சிரியாவிடம் இராசயன ஆயுதங்கள் இருப்பது என்பது முற்றிலும் பொய். அடுத்த வாரம் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் சிரியா பிரச்சினை குறித்து விவாதிப்பதே நல்லது. இவ்வாறு புடின் கூறினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை: