உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு ஆய்வின்போதும் தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்புத் தன்மை வெளிப்பட்டுள்ளது.
பல இடங்களில் பாமக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தகுதியற்ற காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் ஆளும் கட்சியினரின் வேட்பு மனுக்களில் ஏராளமான குறைகள் இருப்பதை மற்ற கட்சி வேட்பாளர்கள் சுட்டிக்காட்டிய போதும் அதை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.வேட்புமனு தாக்கலின்போதே ஆணையத்தின் செயல்பாடுகள் இவ்வாறு இருப்பதால், உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறுமா என ஐயம் எழுந்துள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக