சனி, 8 அக்டோபர், 2011

மாகாண சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரம்: அரசு கவனம் செலுத்தி வருகிறது

மாகாண சபைகளுக்கு முழுமை யாக பொலிஸ் அதிகாரம் வழங்கு வது தொடர்பில் பிரச்சினை உள்ள போதும் அவற்றுக்கு ஓரளவுக்கு அதி காரம் வழங்குவது குறித்து அரசாங் கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெ ல்ல தெரிவித்தார். ஏனைய மாகாண சபைகள் பொலிஸ் அதிகாரம் தேவையில்லை என்று கூறுகிற போதும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில் பிரச்சினைகள் உள்ள போதும் அது தொடர்பில் கவனம் செலுத்தி யிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். பொலிஸாரின் தடுப்புக் காவலில் இருக்கையில் சந்தேக நபர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் அமைச்சர் கருத்துத் தெரிவித்தார். இந்த விடயத்தில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது. பொலிஸ் தடுப்புக் காவலில் சந்தேக நபர்கள் இறந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது குறித்து கவனம் செலுத்தி எங்கு தவறு உள்ளது என்பதை அறிந்து அதனை தீர்க்க வேண்டும். பொலிஸ் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதா என்பது குறித்தும் ஆராய வேண்டியுள்ளது. புதிய பொலிஸ் மாஅதிபர் தனது பணியை சிறப்பாக செய்கிறார். சட்டம் சமமாகவே அமுல்படுத்தப்படுகிறது. சில தரப்பினரிடமுள்ள குழப்பும் மனப்பாங்கினாலும் பொலிஸாருக்கு எதிரான மோதல்கள் வெடிக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை: