திருச்சி: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, உல்லாசமாக இருந்து ஏமாற்றிய திருச்சி வாலிபருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் வசிப்பவர் கார்த்திக் தியோடர் (30). இவருடைய குடும்பம் திருச்சியில் மிகவும் பாரம்பரியம் மிக்கது. இவர் கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்குச் சென்றார். அங்கு ஏற்கனவே வசித்து வரும் தமிழ்ப்பெண் கவிதா (29) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கவிதா அங்குள்ள வெளிநாட்டு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கவிதாவுக்கும், கார்த்திக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் குடும்பத்துக்கு தெரியாமல் நிச்சயம் செய்து கொண்டு, ஆஸ்திரேலியாவில் தனியாக வீடு எடுத்து வசித்துள்ளனர்.ஓராண்டுக்கும் மேலாக கவிதாவுடன் கார்த்திக் குடும்பம் நடத்தியுள்ளார். அதன்பின் கவிதாவை விட்டு அவர் விலகிச் செல்ல ஆரம்பித்தார்.
இதை முதலில் கண்டுகொள்ளாத கவிதா, பின் விழித்துக்கொண்டு கார்த்திக்கை பின்தொடர ஆரம்பித்துள்ளார். அப்போது தான் கவிதாவுக்கு தெரியாமல் திருச்சி திரும்ப கார்த்திக் திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு கார்த்திக் பின்னாலே கவிதாவும் இந்தியாவுக்கு திரும்பினார். கார்த்திக்கை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து சந்தித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் வந்தது குறித்து நியாயம் கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் ஒன்றும் பதில் சொல்லாமல் திருச்சிக்கு வந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கவிதா திருச்சி வந்து, கார்த்திக் தன்னை ஏமாற்றியது குறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போது கார்த்திக் தியோடர் கைது செய்யப்பட்டார். உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், கவிதா விடாமல் தன்னிடம் உள்ள ஆதாரங்களை காட்டி, போலீஸார் வழக்கை துரிதப்படுத்த உதவினார்.
திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு கடந்த இரண்டு ஆண்டாக நடந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. கவிதாவை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, உல்லாசம் அனுபவித்து, திருமணத்துக்கு மறுத்த கார்த்திக் தியோடருக்கு ஏழாண்டு சிறை தண்டனை வழங்கி, மகளிர் நீதிமன்ற நீதிபதி மாயாண்டி தீர்ப்பளித்தார். * அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தபின், கார்த்திக் தியோடர் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அவரையும் கார்த்திக் தியோடர் விவாகரத்து செய்துவிட்டதாக தெரிகிறது. இவ்வழக்கை பொறுத்தவரை கவிதா தனியொரு ஆளாக ஆஸ்திரேலியாவிலிருந்து, திருச்சி வந்து, பல்வேறு பிரச்னைக்கு இடையே புகார் செய்தும், வழக்கை நடத்தியும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக