சர்வதேசத்தில் நீதியின் கதவடைக்க முயலும் விடுதலைப் புலிகளின் கறைபடிந்த கரங்கள்!
பயங்கரவாதிகளுக்காக குரல் கொடுக்கும் நெதர்லாந்து சட்டத்தரணி நெதர்லாந்தில் புலிகளுக்காக நிதி சேகரித்து அதனை ஆயுதக் கொள்வனவுக்கு பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இடம் பெற்று வரும் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் விசாரணைகளில் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐந்து விடுதலைப் புலிகளின் சார்பில் ஆஜராகி வாதிடும் சட்டத்தரணி விக்டர் கொப்பே முன் வைத்துள்ளார்.
இந்த விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் ஐவருக்கும் நெதர்லாந்து சட்டப்படி 10- 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரச சட்டவாதிகள் கோரியுள்ள நிலையில் குறித்த வழக்கு நியாயமற்ற வகையில் முன்னெடுத்து செல்லப்படுவதாக கொடிய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்காக வாதிடும் சட்டத்தரணி கொப்பே குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வேளையில் குறித்த சட்டத்தரணி ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை செய்யப்பட்ட அமைப்பாக உள்ள பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் நெதர்லாந்தில் மேற்கொண்ட நிதி சேகரிப்பு அதன் மூலமான ஆயுதக் கொள்வனவு தொடர்பான விசேட போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹேக் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளும் அந்த விசாரணைகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது நலன் விரும்பிகள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தரணி விடுதலைப் புலிகள் மீது காட்டும் பரிவும் பாசமும் நெதர்லாந்து நீதிபதிகளையே அவர் சந்தேகப்படும் நிலைக்கு அவரை இட்டுச் சென்றுள்ளது.விடுதலைப் புலிகளின் கையூட்டுகள் சர்வதேச அரங்குகளையும் சென்றடைவதாக கருதப்படும் நிலையில் சனல் 4 தொலைக்காட்சி, சர்வதேச மன்னிப்புச் சபை, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சீபொன் மக்டொனால், மார்கிரெட் மக்டொனால், கீத்வாஸ், வீரேந்திரசர்மா, ஜோண் ரயன் ஆகிய சீபொன் மக்டொனால்ட்டின் தொகுதியின் கவுன்சிலர்களான அலிஸன் மார்க், பெர்ரஸ் மர்க் மற்றும்…….பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பலர் வரிசையில் பொக்லர் குறூப்பின் நெதர்லாந்து சட்டத்தரணியான விக்டர் கொப்பேயையும் சென்றடைந்துவிட்டது என்பதில் ஐயமில்லை.சட்டத்தரணி விக்டர் கொப்பெ கடந்த யூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவேண்டும் என்று கோரி விடுதலைப்புலிகளின் ஐரோப்பிய பிரிவின் சார்பாகவும் ஐரோப்பிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்..விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை அடைவதற்கு இப்போது இராணுவ வழிமுறைகள் எதையும் பயன்படுத்துவதில்லை என்ற நற்சான்றினையும் உறுதிப்படுத்தி இந்த ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள விடுதலைப் புலிகள் மீதான தடையையும் நீக்கும்படி கோரியிருந்தவர்.அது மட்டுமல்ல நெதர்லாந்து புலிகளுக்காக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையின்போது சனல் தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் காட்சியை ஒளிபரப்பும்படியும் கோரிக்கை விடுத்தவர். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை கடாபிக்கு எதிரான லிபிய போராளிகளுக்கு ஒப்பிட்டு நெதர்லாந்து புலிகளுக்காக வாதிடியவர் மீண்டும் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம், பயங்கரவாத அமைப்பு இல்லை எனவும், அவர்கள் கடாபிக்கு எதிரான போராட்டக் குழுவுக்கு ஒப்பான விடுதலைப் போராளிகள் எனவும் தெரிவித்திருந்தார்;பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகள் மீதான நம்பகத்தன்மை நெதர்லாந்து சட்டத்தரணி விக்டர் கொப்பருக்கு நெதர்லாந்தின் மூன்று நீதிபதிகளையும் சந்தேகம் கொள்ள வைத்து நெதர்லாந்து நீதித்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளாரவிடுதலைப் புலிகளுக்காய் வக்காலத்து வாங்கும் சர்வதேச பிரமுகர்கள் வரிசையில் உள்ளவர்களுக்கு விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயல்களால் கொலை செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்கள் , மாற்றுக்கட்சி உறுப்பினர்கள், அழிக்கப்பட்;ட மக்கள் , இழக்கப்பட்ட சொத்துக்கள், இவற்றுக்கு எந்த நீதியை கற்பிக்கப்போகின்றார்கள்?
இந்த விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் ஐவருக்கும் நெதர்லாந்து சட்டப்படி 10- 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரச சட்டவாதிகள் கோரியுள்ள நிலையில் குறித்த வழக்கு நியாயமற்ற வகையில் முன்னெடுத்து செல்லப்படுவதாக கொடிய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்காக வாதிடும் சட்டத்தரணி கொப்பே குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வேளையில் குறித்த சட்டத்தரணி ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை செய்யப்பட்ட அமைப்பாக உள்ள பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் நெதர்லாந்தில் மேற்கொண்ட நிதி சேகரிப்பு அதன் மூலமான ஆயுதக் கொள்வனவு தொடர்பான விசேட போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹேக் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளும் அந்த விசாரணைகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது நலன் விரும்பிகள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தரணி விடுதலைப் புலிகள் மீது காட்டும் பரிவும் பாசமும் நெதர்லாந்து நீதிபதிகளையே அவர் சந்தேகப்படும் நிலைக்கு அவரை இட்டுச் சென்றுள்ளது.
விடுதலைப் புலிகளின் கையூட்டுகள் சர்வதேச அரங்குகளையும் சென்றடைவதாக கருதப்படும் நிலையில் சனல் 4 தொலைக்காட்சி, சர்வதேச மன்னிப்புச் சபை, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சீபொன் மக்டொனால், மார்கிரெட் மக்டொனால், கீத்வாஸ், வீரேந்திரசர்மா, ஜோண் ரயன் ஆகிய சீபொன் மக்டொனால்ட்டின் தொகுதியின் கவுன்சிலர்களான அலிஸன் மார்க், பெர்ரஸ் மர்க் மற்றும்…….பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பலர் வரிசையில் பொக்லர் குறூப்பின் நெதர்லாந்து சட்டத்தரணியான விக்டர் கொப்பேயையும் சென்றடைந்துவிட்டது என்பதில் ஐயமில்லை.
சட்டத்தரணி விக்டர் கொப்பெ கடந்த யூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவேண்டும் என்று கோரி விடுதலைப்புலிகளின் ஐரோப்பிய பிரிவின் சார்பாகவும் ஐரோப்பிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்..
விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை அடைவதற்கு இப்போது இராணுவ வழிமுறைகள் எதையும் பயன்படுத்துவதில்லை என்ற நற்சான்றினையும் உறுதிப்படுத்தி இந்த ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள விடுதலைப் புலிகள் மீதான தடையையும் நீக்கும்படி கோரியிருந்தவர்.
அது மட்டுமல்ல நெதர்லாந்து புலிகளுக்காக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையின்போது சனல் தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் காட்சியை ஒளிபரப்பும்படியும் கோரிக்கை விடுத்தவர். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை கடாபிக்கு எதிரான லிபிய போராளிகளுக்கு ஒப்பிட்டு நெதர்லாந்து புலிகளுக்காக வாதிடியவர் மீண்டும் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம், பயங்கரவாத அமைப்பு இல்லை எனவும், அவர்கள் கடாபிக்கு எதிரான போராட்டக் குழுவுக்கு ஒப்பான விடுதலைப் போராளிகள் எனவும் தெரிவித்திருந்தார்;
பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகள் மீதான நம்பகத்தன்மை நெதர்லாந்து சட்டத்தரணி விக்டர் கொப்பருக்கு நெதர்லாந்தின் மூன்று நீதிபதிகளையும் சந்தேகம் கொள்ள வைத்து நெதர்லாந்து நீதித்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார
விடுதலைப் புலிகளுக்காய் வக்காலத்து வாங்கும் சர்வதேச பிரமுகர்கள் வரிசையில் உள்ளவர்களுக்கு விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயல்களால் கொலை செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்கள் , மாற்றுக்கட்சி உறுப்பினர்கள், அழிக்கப்பட்;ட மக்கள் , இழக்கப்பட்ட சொத்துக்கள், இவற்றுக்கு எந்த நீதியை கற்பிக்கப்போகின்றார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக