செவ்வாய், 4 அக்டோபர், 2011

காதலிப்பதற்காக காத்திருக்கிறேன்! காதலன்?அங்காடி தெரு அஞ்சலி


கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அங்காடி தெரு மூலம் வெற்றி நாயகியாகியான நடிகை அஞ்சலி அடுத்தடுத்து வந்த படங்களில் கிளாமர் ரோல்களில் நடிக்க தொடங்கினார்.வதந்திகள் எதிலும் சிக்காத அஞ்சலியிடம் காதல், திருமணம் பற்றிக் கேட்கப்பட்டது.  அதற்கு அவர் காதல் திருமணத்தில் எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால் காதலிக்கதான் தற்போது நேரம் இல்லை. எனக்கு பிடிச்ச ஆள் எந்த துறையில் இருந்தாலும் காதலிப்பேன். அவரை பிடித்து வந்து கண்டிப்பாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன். இதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.  அந்த காதலுக்காகதான் காத்திருக்கேன். காதலித்து திருமணம் செய்வதற்கு எனக்கு நிறைய அவகாசம் உள்ளது. எனக்கு கிடைக்க வேண்டிய ஒரு நேஷனல் அவார்டை நழுவ விட்டு விட்டேன். அதை எப்படியாவது வாங்கியே ஆக வேண்டும் என்பதில்தான் தற்போது என் கவனம் உள்ளது .மகாராஜன்  என்கிற படத்தில் இதுவரை நீங்கள் பார்க்காத அஞ்சலியை  பார்க்கலாம். வித்தியாசமாக நடித்துள்ளேன். நான் சினிமாத்துறைக்கு பிடிச்சுதான் வந்தேன் என்கிறார் அஞ்சலி.

கருத்துகள் இல்லை: