அரசாங்க மருத்துவர் ஒருவர் புலிகளின் பணத்தைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது!
அரசாங்க மருத்துவர் ஒருவர் புலிகளின் பணத்தைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.போரின் இறுதிக் கட்டத்தின் போது முல்லைத்தீவு உண்மை நிலைமைகளை வெளிப்படுத்திய மருத்துவர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளின் சர்வதேச வலையமைப்பினர் குறித்த மருத்துவருக்கு பணம் வழங்கியுள்ளனர்.
புலிகளின் அழுத்தங்களின் காரணமாக போலியான தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கியதாக ஒப்புக்கொண்ட ஐந்து மருத்துவர்களில் ஒருவரே இவ்வாறு இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்ததன் பின்னர் புலிகளின் அழுத்தங்களினால் போலியான தகவல்களை வழங்கியதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது குறித்த மருத்துவர் அறிவித்திருந்தார்.
குறித்த ஐந்து மருத்துவர்களுக்கும் பணம் வழங்கி லண்டனுக்கு அழைத்துக் கொள்ளும் திட்டமொன்றை புலிகள் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தியா சென்றுள்ள மருத்துவர் லண்டனுக்கு பயணம் செய்யக் கூடும் எனவும், இந்த நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர் என லக்பிம தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக