வெள்ளி, 7 அக்டோபர், 2011

விஜயகாந்த்:ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலத்தான் நானும்


Vijayakanth
தேனி: ரமணா படம் பார்த்தீர்கள் அல்லவா, அதேபோலத்தான் நானும். தேமுதிகவில் யாரேனும் ஊழல் செய்தால் அவர்கள் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது. ஊழல்வாதிகளை விரட்டி அடியுங்கள் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அல்லி நகரம் பேருந்து நிறுத்தம் அருகே அவர் பேசியதாவது,
உள்ளாட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியோடு, மக்கள் வரிப் பணமும் பயன்படுத்தப்படுகிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் மக்களின் அடிபப்டைத் தேவைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. மக்களே சிந்தித்துப் பாருங்கள்.

நான் நடித்த ரமணா படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் ஊழல்வாதிகள் எப்படி பயப்படுவார்கள் என்று உங்களுக்கே தெரியும். அதே போன்று என் கட்சியிலும் யாராவது ஊழல் செய்தால் என்னிடம் இருந்து தப்பிக்கவே முடியாது. மக்களுக்காகத் தான் உள்ளாட்சி. மக்கள் நலம்பெறத் தான் நான் கட்சி நடத்துகிறேன்.

படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த கட்சி வந்தால் நல்லது நடக்கும், அந்த க்டசி வந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று நினைத்து வாக்களித்து பயனில்லாமல் போனது. அதனால் தான் நான் மக்களுக்காகவே கட்சி துவங்கினேன். ரமணா படத்தில் வருவது போன்று ஊழலை ஆணி வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டும்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது போன்று வாக்களிக்கும் மக்களை தேமுதிகவினர் ஒருபோதும் மறக்காமல் விசுவாசமாக இருப்பார்கள் என்றார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் பேசியதாவது,

உள்ளாட்சித் தலைவர்களை தேர்ந்தெடுக்கையில் அவர்கள் நல்லவர்கள் தானா என்பதை பார்த்து உங்களுக்காக யார் உழைப்பார்கள் என்பதை கண்டறிந்து வாக்களியுங்கள். ஊழல்வாதிகளை விரட்டி அடியுங்கள்.
தேர்தல் வந்துவிட்டால் உங்களை சந்தித்து கும்பிட்டு வாக்கு கேட்கிறார்கள். வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் உங்களைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. வாக்குறிதிகளையும் நிறைவேற்றுவது இல்லை. நான் யாரையும் லஞ்சம் வாங்கவிடமாட்டேன். உள்ளாட்சி அமைப்புகளில் கொள்ளையடிப்பவர்களை தட்டிக்கேட்போம் என்றார்

கருத்துகள் இல்லை: