புதன், 5 அக்டோபர், 2011

இடைத் தேர்தல்- எ.வ.வேலு, செல்வகணபதி ஹோட்டல் அறைகளில் ரெய்டு


Velu and and Selvaganapathuy
திருச்சியில், முன்னாள் திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, செல்வகணபதி உள்ளிட்ட திமுகவினர் தங்கியுள்ள ஹோட்டலுக்குள் புகுந்த அதிகாரிகள் குழு அங்கு அறை அறையாக சோதனையிட்டனர். இதனால் திமுகவினர் பரபரப்படைந்தனர்.
அம்மான்னா சும்மாவா உங்களை தேர்தல் பிரசாரம் செய்யவிடுவாரா?
திருச்சி மேற்கு இடைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இங்கு அதிமுக சார்பி்ல மு.பரஞ்சோதியும், திமுக சார்பில் கே.என்.நேருவும் போட்டியிடுகின்றனர்.
திமுக சார்பில் பிரசாரத்தை முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, செல்வகணபதி, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் பொறுப்பாளர்களாக இருந்து பிரசாரத்தைக் கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் தங்கியுள்ள ஹோட்லுக்கு திருச்சி ஆர்.டி.ஓ. சம்பத் தலைமையிலான அதிகாரிகள் திடீரென வந்தனர். அங்கு அறை அறையாக சென்று சோதனையிட்டனர். மேலும் திமுகவினர் கார்களிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இதுகுறித்து வேலு கூறுகையில், அதிமுக அமைச்சர்களும்தான் இந்த ஹோட்டலில் தங்கியுள்ளனர். அங்கெல்லாம் சோதனை நடத்தாதது ஏன் என்று தெரியவில்லை. தேர்தல் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார் அவர்

கருத்துகள் இல்லை: