தென் இந்தியாவின் கேரள மாநிலத்திற்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.இந்திய காவல்துறையினரும், புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக இணைந்து இந்தக் கண்காணிப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
கொச்சி விமான நிலையத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கை மற்றும் மாலை தீவு போன்ற நாடுகளிலிருந்து கேரள மாநிலத்திற்கு விஜயம் செய்யும் நபர்கள் வீசா காலம் முடிவடைந்ததன் பின்னரும் தங்கியிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளை இணைத்துக் கொள்ளும் முக்கிய இடங்களில் ஒன்றாக மாலைதீவு மாறியுள்ளதாகவும், இலங்கையில் புலி சந்தேக நபர்களின் பிரச்சினை காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக