ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இரங்கல் இல்லை இந்தப் பதிவு.
* ஆப்பிள் அற்புதமான கணினியாக இருந்தாலும் எதையெடுத்தாலும் நான்தான், நானேதான் செய்வேன் என்று தொங்கிக்கொண்டிருந்த காரணத்தால் வளரவேயில்லை. மைக்ரோசாஃப்ட் செழித்தது; பிசி பிசினஸ் வளர்ந்தோங்கியது. இன்றும்கூட ஒரு சிறு குழுவைத் தாண்டி மேகிண்டாஷ் கணினிகள் பரவவில்லை என்பது நிதர்சனம்.
* ஜாப்ஸின் உண்மையான மார்க்கெட்டிங் மாயாஜாலம் ஐபாட், ஐட்யூன்ஸில் ஆரம்பித்தது. அதுவரையில் வெறும் தொழில்நுட்ப, அழகியல் கலைஞராக இருந்தவர் பணம் பண்ணும் ஒரு மாபெரும் ஐடியாவை எடுத்தாண்டது இந்த விஷயத்தில்தான். இன்றுவரை ஆப்பிள்தான் இந்தத் துறையில் கிங். ஆனால் இனியும் அப்படி இருக்கமுடியாது. காரணத்தை அடுத்து பார்ப்போம்.* ஐபாட், ஐஃபோன், ஐபேட் - தமிழ்கூறும் நல்லுலகின் பாஷையில் சொல்லப்போனால், ‘சான்ஸே இல்ல’. ப்ராடக்ட் இன்னோவேஷன் + மார்க்கெட்டிங் சென்ஸ் சரியான கலவையில் கலந்து செய்த வித்தை.
* ஸ்டீவ் ஜாப்ஸின் தோல்வி - புத்தகச் சந்தையைப் புரிந்துகொள்ளாதது; அமேசானின் திறனைச் சரியாகக் கணக்கிடாதது.
* ஆப்பிளின் போட்டிக்காரன் அமேசான். ஐக்ளவுட் என்று ஆப்பிள் பேசிக்கொண்டிருக்கும்போதே அமேசான் அதனைச் செய்துமுடித்துவிட்டது. கிண்டில் ஃபயர் என்னும் கலர் டேப்ளட் ஐபேடை ஒப்பிடும்போது மிகக் குறைந்த விலை. ஆப்பிள் அதற்குப் போட்டியாக ஒன்றைச் செய்து முடிப்பதற்குள், இதுவரை ஐபேட் வாங்கியிராத உலக மக்கள் பலரும் கிண்டில் ஃபயருக்குத் தாவியிருப்பார்கள்.
* கிண்டில் ஃபயரில் என்னவெல்லாம் செய்யமுடியும்? புத்தகங்களை வாங்கி, படிக்கலாம். புத்தகம் கிளவுடில் இருக்கும். சினிமாக்களை வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். பாடல்களை இறக்கிக் கேட்கலாம். அமேசானின் கிளவுட் வழியாக வெப் பிரவுசிங் செய்யலாம். (இது எனக்குப் பிடிக்கவில்லை!) ஆப்பிள் இந்த நிலைக்கு வர கனகாலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
அடுத்த ஐந்தாண்டுகள், அமேசானின் ஆண்டுகள்.
இதில் ஆப்பிள் ஒரு லூஸர் என்றால், கூகிள் மாபெரும் லூஸர்!
Amazon > Apple > Google !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக