வியாழன், 9 ஜூன், 2011

Saudi Arabia இலங்கைப் பெண் 16 வருடம் வீட்டில் சிறை

சவுதி வேலை வழங்குனர் ஒருவர் 16 வருடம் இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணுக்கு சம்பளம் வழங்காது வீட்டில் அடைத்து வைத்திருந்ததாக சவுதி அரேபிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த பணிப் பெண் விசாவினை புதுப்பிக்க கோரிய போதும் வேலை வழங்குனர் மறுத்துள்ளார். வீட்டில் இருந்து வெளியே செல்வதற்குகூட அவர் அனுமதிக்கப்படவில்லை.

தாம் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அறிந்து கொண்டதாகவும் தாம் அதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சவுதி தேசிய மனித உரிமையக கிளை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வேலை வழங்குனர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறித்த பெண்ணுக்கு ஊழிய மீதியினை வழங்குவரை விடுவிக்கப்படமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: