உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுக்கும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கும் இடையில் இன்று மாலை அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்து அவர்கள் இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விவாதிப்பதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய உயர்மட்டக் குழு நாளை கொழும்பு வந்தடையவுள்ளது. இந்திய உயர்மட்டக் குழுவின் இரண்டு நாள் பயணத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படள்ளது. இந்நிலையிலேயே இன்று தமிழக முதல்வரை சந்தித்து சிவசங்கர் மேனன் ஆலோசனை நடத்தியுள்ளார் என்று தமிழக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக