தமிழக சட்டசபையில் சமச்சீர்கல்வி திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மாணவர்களுக்கு ஒரே சீரான கல்வியை வழக்கும் நோக்கில், திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அதிமுக அரசு அறிவித்தது.
இன்று காலையில் சபை கூடியதும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி., சண்முகம் சமச்சீர்கல்வி திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
இதற்கு தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமச்சீர் கல்வியை கிடப்பில் போட அ.தி.மு.க., அரசு எடுக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டினர்.
இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என முதல் அமைச்சர் ஜெயலலிதா சட்ட சபையில் தெரிவித்தார்.
சமசீர் கல்வி திருத்த மசோதாவானது சமசீர் கல்வி திட்டத்தையே கேலிப்பொருளாக்கி கிடப்பில் போடும் முயற்சியாகத்தான் ஏறக்குறைய எல்லோரும் கருதுகிறார்கள்.
அதிமுகவினரும் கூட இப்படித்தான் கருதுகிறார்கள்.
என்னசெய்வது கோயில்களுக்கு அன்னதானமும் சத்துணவு திட்டத்திற்கு மாற்றாந்தாய் அணுகுமுறையும் காட்டிய அம்மையா அல்லவா?
இவரிடம் இருந்து சமுதாயத்தின் நலிந்து போன பரம்பரையினர் வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்?
கல்லூரிக்கு போகத்தொடங்கி இருக்கும் குப்பன் சுப்பனின் பிள்ளைகள் இனி அம்மையார் கொடுக்கப்போகும் ஆடு மாடுகளையும் மேய்க்க ரெடியாக வேண்டியும் வரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக