புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர்: நாடு திரும்பவும் அரசுடன் பேசவும் அவர்களுக்கு உரிமை உண்டு
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்ல. அவர்கள் இந்த நாட்டின் மக்கள், அவர்களை புலிகள் என்ற பார்வையில் நோக்கக் கூடாது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், புலம்பெயர்ந்து வாழ் எமது தமிழ் மக்கள் திரும்பி வருவதற்கு உரிமை இருக்கின்றது. அரசுடன் அவர்கள் பேசுவதற்கும் உரிமை இருக்கிறது. அவர்களை அழைத்து தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் எமக்கிருக்கிறது. அவர்கள் விடயத்தில் நாம் உணர்ச்சி வசப்படக் கூடாது. புலம்பெயர் வாழ். புலிகள் இருக்கிறார்கள். அவர்கள் வெளிநாட்டிலிருந்தவாறு நிதி சேகரித்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக புலம்பெயர் தமிழர்கள் அனைவரை யும் புலிகள் என நோக்கக் கூடாது. புலம் பெயர் தமிழ் மக்கள் நிறைந்த அறிவுடன், தொழில்நுட்பதுறை தகவல் தொழில்நுட்பம், டாக்டர்களாக, பொறியியலாளர்களாக வாழ்கிறார்கள். அவர்களது அறிவுத் திறன் எமது நாட்டுக்கு தேவையானது அவர்கள் இங்கு வரும்பட்சத்தில் அபிவிருத்தியின் பங்காளிகளாக மாற்ற முடியும் தமிழர் பகுதி மட்டுமல்ல இலங்கையையே ஒரு வளர்ச்சியடைந்த நிலைக்கு இவர்களால் கொண்டு வர முடியும். அவர்களை நாம் வரவேற்கிறோம் என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக