செவ்வாய், 7 ஜூன், 2011

மு.க.அழகிரி நீதிமன்றத்தில் சரண்டர்!மத்திய அமைச்சர் மதுரை மேலூர் நடுவர் நீதிமன்றத்தில்


கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேலூர் வள்ளாள கோவிலில் ஏற்பட்ட தகராறில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மதுரை துணை மேயர் மன்னன் உட்பட 6 பேர் மீது, மேலூர் தாசில்தார் காளிமுத்து அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காளிமுத்து வழக்கு பதிவு செய்த ஓரிரு நாளில் மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனு செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த அடிப்படையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உட்பட 6 பேரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தனர்.
முன்ஜாமீன் வழங்கப்பட்டதன் பேரில் மதுரை மேலூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி யாத்மின் முன்பு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னள் ஆகிய இருவர் மட்டும் இன்று காலை ஆஜரானார்கள்.
அப்போது, மதுரை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதையடுத்து, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மன்னன் ஆகிய இருவரையும் ஜாமீனில் செல்ல உத்தரவிட்டார்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கோர்ட் வருவதையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினரும், நூற்றுக்கும் மேற்பட்ட திமுக வழக்கறிஞர்களும் கூடினர். மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்காக மூத்த வழக்கறிஞர் பிரேம் ராஜ் அம்ரூஸ் ஆஜரானார்.

கருத்துகள் இல்லை: