கூடா நட்பு என்று சொன்னீர்களே, அது யாரைப் பற்றி?
கலைஞர் பதில்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 10.06.2011 அன்று நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் முடிந்ததும், தி.மு.க. தலைவர் கலைஞர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அளித்த பதில்களும் வருமாறு:
இன்று நீங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தில் சி.பி.ஐ. பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மத்திய அரசு, சி.பி.ஐ. நிறுவனத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆயுதமாக இருக்கலாம், அரசியல் ஆயுதமாக இருக்க முடியாது
கேள்வி: திருவாரூரில் நீங்கள் பேசும்போது கனிமொழி மீது போடப்பட்டுள்ள வழக்கு மத்திய அரசால் போடப்பட்ட வழக்கு என்பதைப் போலச் சொன்னீர்கள். இன்றைய உங்கள் தீர்மானத்தில் அதை ஏன் குறிப்பிடவில்லை?.
தில்: திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை திரித்துச் சொல்லாமல், முறையாக, ஒழுங்காக, உண்மையாக, சத்தியமாகக் கேளுங்கள்.
கேள்வி: "கூடா நட்பு'' என்று சொன்னீர்களே, அது யாரைப் பற்றி?.
உங்களில் ஒருசிலரோடு இருக்கின்ற நட்பாகக் கூட இருக்கலாம் அல்லவா?
கேள்வி: காங்கிரஸ் கட்சி தி.மு.க.வை என்றைக்கும் மதித்ததில்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கூறினீர்கள். இப்போது கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னீர்கள். அதனால் மீண்டும் இப்போது காங்கிரஸ் கட்சி தி.மு.க.வை என்றைக்கும் மதித்ததில்லை என்று கூறுவீர்களா?.
ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றி அப்போதுள்ள நிலையைப் பொறுத்து கூற வேண்டிய சூழ்நிலையில் நான் அப்படி கூறியிருப்பேன். அதையே இப்போதும் நீங்கள் கூறுவீர்களா என்று கேட்க முடியாது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக